மத்திய அரசின் அறிவிப்பால் தனியார் நிறுவனங்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!
கடந்த சில வருடங்களாக நிலக்கரி உற்பத்தியில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு அறிவித்து வரும் நிலையில், தற்போது நிலக்கரி உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்கு வர்த்தகத்திற்காக அளிக்க முடிவு செய்துள்ளது.
இது சுரங்க துறையில் இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்.

மேலும் நிலக்கரி சுரங்க சட்டம் 2015 மற்றும் சுரங்கம் மற்றும் தாது சட்டம் 1957 இன் கீழ் இருக்கும் நிலக்கரியைச் சுரங்கத்தைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப் பொருளாதார விவகாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஏலம் வெளிப்படையாக நடக்க உள்ளது. இதன் வாயிலாக இத்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும், அதேபோல் ஊழியர்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications