4 மாநிலங்களில் 6 ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்.. தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம்..!
மத்திய அரசு 11,661 கோடி ரூபாய் மதிப்பிலான 6 ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்களில் புதிய ரயில் பாதை முதல், விரிவாக்கம், மற்றும் மின்மயமாக்குதல் ஆகிய திட்டங்களும் அடங்கும்.
இத்திட்டத்தின் மூலம் தனிநபருக்கு 2 கோடி நாட்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் வாயிலாக உத்தரப் பிரதேசம் மாநில மக்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திட்டங்கள் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஓடிஷா ஆகிய மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சுமார் 881 கிலோமீட்டர் ரயில் பாதைக்கான பணிகளைச் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications