மகாராஷ்டிரா மாநில முதலீட்டாளர்கள் மாநாடான 'மேகனடிக் மகாராஷ்டிரா' கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 18-ம் தேதி துவங்கிய இந்த மாநாடு பிப்ரவரி 20-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
ஜவுளி தொழில், பொறியியல், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் என இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10 லட்சம் கொடி ரூபாய் முதலீட்டையும் 35 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற மகாராஷ்டிரா அரசும் மக்களும் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாள் மாநாட்டுக் கூட்டத்தின் போதே முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றதுடன் பல முதலீடு திட்டங்களை அறிவித்துள்ளனர்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து 60,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த டிஜிட்டல் பகுதியை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
அடுத்த 10 வருடத்தில் இந்த 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும், இந்தத் திட்டம் குறித்துச் சர்வதேச நிறுவனங்களுடன் விவாதித்த போது 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சில வாரங்களில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டன என்றும் அதில் சிஸ்கோ, சீமன்ஸ், எச்பி, டெல்ல், நோக்கியா மற்றும் என்விடியா பல முக்கிய நிறுவனங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனந்த மகேந்திரா
மகேந்திரா குழுமம் 2,300 கோடி ரூபாய் செலவில் மூன்று முக்கியத் திட்டங்களை மகாராஷ்டிராவில் செய்ய இருப்பதாகவும், அதில் 1,700 கோடி ரூபாய் முதலீட்டில் திரைப்படம் சார்ந்த பொழுதுபோக்கு மையம் அமைப்பதும் ஒன்று.
நாக்பூரில் டெக் மகேந்திரா நிறுவனத்தின் கீழ் 125 கோடி ரூபாய் முதலீட்டில் பசுமை டெக் ஹப்புகள் அமைக்கப்படும் என்றும் இதன் கீழ் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
விர்ஜின் குழுமம் ரிச்சர்ட் பிரான்சன்
மும்பை - புனே இடையில் ஹைப்பர் லூப் போக்குவரத்துச் சேவையினைக் கொண்டு வர இருப்பதாகவும் இதன் கீழ் 20 நிமிடத்தில் மும்பையில் இருந்து புனே செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார். முதல் ஹைப்பர் லூப் பாதையானது செண்டர்ல் புனேவில் இருந்து நவி மும்பை விமான நிலையம் வரை அமைக்கப்பட இருக்கின்றது.
இந்தத் திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 150 மில்லியன் பயணிகள் பயன்பெறுவார்கள், விரைவில் இந்தத் திட்டத்திற்கான செலவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சாப்ட் பேங்க் எனர்ஜி
ஜப்பானின் சாப்ட் பாங்க் எனர்ஜி நிறுவனம் மகாராஷ்டிராவில் சோலார் பேனல் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக 25,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளது. அது மட்டும் இல்லாமல் வேறு ஒரு வெளிநாட்டு நிறுவனம் இதே துறையில் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது,
லிமிடெட் லையபிலிடி பார்ட்னர்ஷிப் (LLP)
லிமிடெட் லையபிலிடி பார்ட்னர்ஷிப் (LLP) நிறுவனம் மலிவு விலை வீடுகள் கட்டுவதற்காக 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
விவசாயம்
ஐகிரிசாட் நிறுவனம் விவசாயிகளின் வருமானத்தினை இரடிப்புக்க உதவுவதற்காக 63 கோடி ரூபாயினை விதர்பாவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
உலக வங்கி
ஐபிஆர்டி எனப்படும் உலக வங்கியின் துணை நிறுவனம் நடுத்தர மக்களுக்கான கடன் அளிக்கும் திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
87,000 வேலைவாய்ப்புகள்
தலை சுத்திடும்..!
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications