உத்திர பிரதேசத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ கீழ் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும், அதே போன்று அதானி 35,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் 1.50 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உத்திர பிரதேசத்தில் டிஜிட்டல் கட்டுமானத்திற்கான 20,000 கோடி ரூபாயினை முதலீடு செய்துள்ள நிலையில் 10,000 கோடி ரூபாயினை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் கீழ் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி
உத்திர பிரதேசத்தின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முகேஷ் அம்பானி பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கும் ஜியோ டிஜிட்டல் ரெவல்யூஷன் மூலமாகத் தன்னால் முடிந்த வரை பங்கீட்டை அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள ஒரே நிறுவனம் ஜியோ தான் என்றும் அதற்காகப் பெருமைப்படுவதாகவும் அம்பானி கூறியுள்ளார்.
அதானி குழுமம்
உத்திர பிரதேசத்தில் அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ள 35,000 கோடி ரூபாயும் ஒரு குறிப்பிட்ட துறை என்று இல்லாமல் பல் துறைகளில் முதலீடு செய்வதாக அதானி கூறியுள்ளார்.
முதலீடார் மாநாடு 2018-ல் பங்கேற்ற அதானி மின்சாரம், லாஜிஸ்டிக்ஸ், சோலார் பவர், சாலை மற்றும் விவசாயத் துறை என அடுத்த 5 வருடத்திற்கு இந்த முதலீடுகளை உத்திர பிரதேசத்தில் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
உத்திர பிரதேசம்
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் நாட்டின் 17 சதவீத மக்கள் தொகை உள்ளனர். இந்தியாவின் வளர்ச்சியில் இவர்கள் பங்கு இல்லாமல் இருக்க முடியாது என்றும் அதானி குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications