ஈபிஎப் மீதான வட்டி விகிதம் 8.55% ஆக குறைப்பு.. காரணம் என்ன?

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஈபிஎப் மீதான வட்டி விகிதத்தினைக் குறைக்காது என்று எதிர்பார்த்து வந்த நிலையில் 50 மில்லியன் சாந்தர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 0.10 சதவீதத்தினைக் குறைத்து அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் சென்ற ஆண்டு வரை அளிக்கப்பட்டு வந்த 8.65 சதவீதம் லாபமானது 8.55 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 5 வருடம் இல்லாததை விட மிகக் குறைவாகும்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

தொழிலாளர் அமைச்சக செயலாலர் எம் சத்தியாவதி புதன்கிழமை மத்திய அரசுடனான கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பங்கு சந்தை நிலையாக இல்லாதது போன்று காரணங்களால் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் குறைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அதிருப்தி

அதிருப்தி

மாத சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் நடத்தர மக்கள் ஏற்கனவே பாஜக அரசு மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் இந்த அறிவிப்பானது மேலும் அத்திருத்தியை ஏற்படுத்தியள்ளது.

 கடன் சார்ந்த முதலீடு திட்டங்கள்

கடன் சார்ந்த முதலீடு திட்டங்கள்

கடன் சார்ந்த முதலீடு திட்டங்களில் இருந்து வரும் லாபம் குறைந்ததால் தால் ஈபிஎப் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் காங்வர் தெரிவித்துள்ளார். மேலும் பங்கு சந்தைச் சார்ந்து முதலீடு திட்டங்கள் மீதான வருவாய்க்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் வருங்காலத்தில் தற்போது அளிக்கப்பட உள்ள 8.55 சதவீதத்தில் இருந்து மேலும் லாபம் சரியவும் வாய்ப்புகள் உள்ளது.

உபரி

உபரி

சென்ற ஆண்டு 8.65 சதவீத வட்டி விகித லாபம் அளித்த போது உபரி 695 கோடி ரூபாயாக இருந்ததாகவும், தற்போது 8.55 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் 586 கோடி ரூபாயாக உபரி குறையும் என்றும் கடன் முதலீடு திட்டங்கள் நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீதம் லாபம் மட்டுமே அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஈபிஎப்

ஈபிஎப்

தற்போது ஈபிஎப்-ல் ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவன பங்கீடாக 12 சதவீதமாகவும் பெறப்படுகிறது. நிறுவனம் அளிக்கும் பங்களிப்பில் 3.67 சதவீதம் ஈபிஎஸ் எனப்படும் பென்ஷன் திட்டத்திற்கும், மீதம் உள்ள 8.33 சதவீதம் மட்டுமே ஈபிஎப் கீழும் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+