இந்திய டிஜிட்டல் பணபரிவர்த்தனை சந்தையில் பல செயலிகள் பணப் பரிமாற்ற சேவைகளை அளித்து வருகின்றன. அதில் எதைப் பயன்படுத்துவது என்று மக்கள் குழம்பி உள்ளனர். எது பாதுகாப்பானது என்பது அதில் முக்கியமான சந்தேகம்.
பேடிஎம் உள்ளிட்ட வாலெட் நிறுவனங்கள் ஏற்கனவே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையினை வழங்கி வரும் நிலையில் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப்-க்கும் யூபிஐ பணப் பரிமாற்ற சேவையினை அளிக்க அனுமதி அளித்துள்ளது ஆர்பிஐ. தற்போது வாட்ஸ்ஆப் பணப் பரிமாற்ற சேவையானது சோதனை ஓட்டத்தில் உள்ள நிலையில் பேடிஎம் & வாட்ஸ்ஆப் செயலிகள் எது பாதுகாப்பானது? எது வசதியானது? போன்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
பாதுகாப்பு
வாட்ஸ்ஆப்பின் பீட்டா பதிவில் பேடிஎம் உள்நுழையக் கடவுச்சொல் ஏதும் தேவையில்லை என்றால் யூபிஐ சார்ந்த செயலி சேவை இரண்டிலும் அளிப்பதால் பாதுகாப்பானது தான், இரண்டு சேவைகளிலும் பரிவர்த்தனை செய்யும் போது யூபிஐ பின் உள்ளிடுவது கட்டாயம் ஆகும்.
வசதி
திறந்த தளத்தில் ஒருவரால் எச்டிஎப்சி வங்கியில் இருந்து பிற வங்கிகள் அல்லது பேடிஎம் போன்ற சேவைகளுக்கும் பணப் பரிமாற்றத்தினைச் செய்ய முடியும். ஆனால் ஐஓஎஸ் வாட்ஸ்ஆப் சேவைகளில் அதில் உள்ள தொடர்பு எண்களுக்கு இடையில் மட்டும் தான் பரிவர்த்தனை செய்ய முடியும். ஆண்டிராய்டு வாட்ஸ்ஆப் செயலியில் விரிச்சுவல் பரிவர்த்தனை முகவரி உள்ளதால் பேடிஎம் போன்று வங்கி கணக்குகளுக்கும் பணத்தினை அனுப்ப முடியும்.
இலக்கு
வாட்ஸ்ஆப் தற்போது யூபிஐ மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்தாலும் வாட்ஸ்ஆப் செயலிகள் இடையில் மட்டும் செய்ய முடியும். ஆனால் பேடிஎம் போன்ற யூபிஐ செயலியானது அனைத்து யூபிஐ முகவரிகளுக்குப் பணப் பரிவர்த்தனையினைச் செய்ய அனுமதி அளிக்கின்றது. சோதனை முயற்சி என்பதால் 1 மில்லியன் பயனர்கள் வரை மட்டுமே பணப் பரிவர்த்தனைக்கான வசதியை வாட்ஸ்ஆப்பில் பெற்றுள்ளனர்.
கூகுள் பே
கூகுள் நிறுவனமும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஆண்டிராய்டு பயனர்களுக்குக் கூகுள் பே மூலமாகப் பணப் பரிவர்த்தனை சேவையினை வழங்கி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்தச் சேவையினை அனைத்துக் கூகுள் செயலிகள் மூலமாகவும் பெற முடியும்.
கூகுள் தேஜ்
கூகுள் நிறுவனம் இந்தியாவிலும் தேஜ் என்ற செயலி மூலமாக யூபிஐ உதவியுடன் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதியினை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications