குரூப் டி ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச தகுதியில் ரயில்வே நிர்வாகம் திருத்தம்.. மகிழ்ச்சி!

இந்திய ரயில்வே துறை 62,907 பணியிடங்களை நாடு முழுவது குரூப் டி கீழ் நிரப்ப இருப்பதாகப் பிப்ரவர் 2ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஆர்ஆர்பி வெளியிட்ட அந்த அறிவிப்பில் எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

ரயில்வே துறை வெளியிட்டு இருந்த அறிவிப்பில் குரூப் டி-க்கு விண்ணப்பிக்க 10 வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது அதற்கு இணையான வேறு சான்றிதழ் போன்றவற்றைப் பெற்று இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் அதிகபட்ச வயது 32ல் இருந்து 31 ஆகக் குறைக்கப்பட்டு இருந்தது.

விதிகளில் தளர்வு

விதிகளில் தளர்வு

இதனைத் தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்கள் துவங்கிய நிலையில் ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயலுக்குப் பல புகார்கள் சென்றபடி இருந்தது. இதனை அடுத்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் நாங்கள் விண்ணப்பதார்களுக்குப் புதிய விதிகளின் கீழ் போதிய கால அவகாசம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. எனவே தற்போது விதித்துள்ள விதிகளைத் தளர்த்தி 10 வகுப்புத் தேர்ச்சி பெற்று இருக்கும் அனைவரும் விண்ணப்பிக்க விலக்க அளித்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

10 வகுப்பு

10 வகுப்பு

தற்போது 10 வதுப்புத் தேர்ச்சி பெற்று இருந்தாலே விண்ணப்பிக்கலாம் என்பது மட்டும் இல்லாமல் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தினையும் 15 நாட்கள் வரை நீட்டிக்க இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

புகார்

புகார்

ரயில்வே அமைச்சகத்திற்குப் பல புகார் சென்றதால் தற்போது குரூப் டி விண்ணப்பிக்கக் கல்வி தகுதி 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது அதற்கு இணையான படிப்புகள் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கட்டணம்

கட்டணம்

பொதுப் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், தேர்வை எழுதுபவர்களுக்கு 400 ரூபாய் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுவே பிற பிரிவினர்களுக்கு 250 ரூபாய் கட்டணம் என்றும் அவர்கள் தேர்வை எழுதும் போது முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கேள்வி தாள்

கேள்வி தாள்

குரூப் டி-க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 மொழிகளில் கேள்வி தாள்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் கையெழுத்தும் இந்தி அல்லது ஆங்கிலம் என்று இல்லாமல் அனைத்து மொழிகளிலும் போட அனுமதி அளித்துள்ளனர்.

 மாற்றங்கள் ஏன்?

மாற்றங்கள் ஏன்?

இந்திய ரயில்வே நிர்வாக 4 வருடங்களுக்குப் பிறகு மிகப் பெரிய லவில் 89,409 நபர்களை 2 நிலையாகப் பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 4 வருடங்களுக்குப் பிறகு பணிக்கு எடுக்க உள்ளதால் தான் நிறைய மாற்றங்கள் செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

 கூடுதல் விண்ணப்பம்

கூடுதல் விண்ணப்பம்

எப்படி இருந்தாலும் புதிதாக அறிவித்த விதிகளில் விலக்கு அளித்துள்ளதால் கூடுதலாக மேலும் பலர் ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+