பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு இருந்த நிலையை மீண்டும் அடைந்தது ரொக்க பணப் பரிவர்த்தனை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ரொக்க பணப் பரிவர்த்தனை 2018 பிப்ரவர் 16 வரை 17.78 டிரில்லியனாக உள்ளதாகவும், 98.94 சதவீதம் என்பது கிட்டத்தட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு இருந்த நிலை தான் என்று ஆர்பிஐ தரவுகள் கூறுகின்றன.

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு 2016-ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியிட்ட தகவலின் படி நவம்பர் 8ம் தேதி 17.97 டிரில்லியன் ரூபாய் அளவில் மக்கள் ரொக்க பயணம் பயன்படுத்தி வந்துள்ளனர்.

 ரொக்க பணப் பரிவர்த்தனை
 

ரொக்க பணப் பரிவர்த்தனை

இதுவே 2017 ஜனவரி 6ம் தேதி 8.98 டிரில்லியன் ரூபாயாக இருந்துள்ளது. பன மதிப்பு நீக்க நடவடிக்கையானது வருமான வரி ஏய்ப்புச் செய்பவர்கள், கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை ஒலிப்பதற்காகவே 86 சதவீத ரொக்க பணத்தினை மாற்றி அமைத்தது இந்திய அரசு.

மத்திய அரசு

மத்திய அரசு

அதே நேரம் குறைந்த அளவில் மட்டுமே ரொக்க பணம் இருந்ததால் மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுமாறும் மத்திய அரசு கோரிக்கை வைத்து வந்தது மட்டும் இல்லாமல் கேஷ் லஸ் இந்தியா என்றும் விளம்பரப்படுத்தி வந்தது.

ஆர்பிஐ

ஆர்பிஐ

மத்திய வங்கி வெளியிட்ட தகவலின் படி 98.96 சதவீதம் அளவிலான மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் 2017 ஜூன் மாதம் வரை ஆர்பிஐ வசம் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மக்கள்

மக்கள்

தற்போது ஆர்பிஐ வெளியிட்டுள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது கேஷ் லஸ் இந்தியா என்ற விளம்பரங்களுக்காகவும், டிஜிட்டல் செயலிகளுக்காகவும் இந்திய அரசு எதற்காகக் கோடி கணக்கில் செலவு செய்தது என்று மட்டும் புரியவில்லை என்றும் மக்கள் கூறிவருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI data tells Currency circulation in India become as it as pre demonetisation level

RBI data tells Currency circulation in India become as it as pre demonetisation level
Story first published: Friday, February 23, 2018, 18:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X