தென் கொரியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் முதலில் தமிழகத்தில் துவங்கப்பட இருந்தது. ஆனால் சில காரணங்களால் அண்டை மாநிலமான ஆந்திராவில் விரவில் துவங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக 3,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளனர்.
முதலீடு
இந்தியாவில் புதியதாகத் தங்களது தயாரிப்பு ஆலையினைத் துவங்க உள்ள கியா மொட்டாஸ் 1 பில்லியன் டாலரினை இதற்காக முதலீடு செய்ய உள்ளது.
தொழிற்சாலை
கியா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை 23 மில்லியன் சதுர அடி நில பரப்பில் ஆண்டுக்கு 3 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறனுடன் அமைய இருக்கிறது.
வேலை வாய்ப்பு
புதிதாகக் கட்டப்பட்டு வரும் தொழிற்சாலையில் பணிபுரிய இந்தியாவில் இருந்து 3,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாகக் கியோ மொட்டார்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆந்திர அரசு
ஊழியர்களைப் பணிக்கு எடுப்பது குறித்து ஆந்திர அரசுடன் விவாதித்து வருவதாகவும், அரசு மற்றும் கியா மோட்டாஸ் நிறுவனம் என இரண்டு தரப்பும் இணைந்து அருகில் உள்ள உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
சிறப்பம்சம்
மிகப் பெரிய கார் என்பதற்கும் கூடுதலான சிறப்பம்சங்கள் கொண்ட கார்களை இந்தியாவில் தயாரிக்க இருப்பதாகவும், இந்திய ஆட்டோ மொபைல் துறையில் மிகப் பெரிய மாற்றத்தினை உருவாக்குவோம் என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹான் வூ பார்க் அன்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தி
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தினை இந்தியாவில் கட்டமைக்கும் பணியானது 2019-ம் ஆண்டின் முதற் காலாண்டிற்குள் முடிவடையும் என்றும் முதலில் எஸ்பி கான்சப்ட் மற்றும் எஸ்யூவி என இரண்டு மாடல் கார்களை 2019-ம் ஆண்டு அரையாண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications