நடிகை ஸ்ரீதேவியின் உடல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விமானம் மூலமாக இந்தியா கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு தான் கொண்டு வர இருப்பதாகவும் இதற்காக தனது விமானத்தினை துபாய் விமான நிலையத்திற்கு நேற்றே அனில் அம்பானி அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

உறவினர் திருமணத்திற்காகத் துபாய் சென்ற 54 வயதான ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமான செய்தி இந்திய சினிமா வட்டாரத்தில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேத பரிசோதனை
துபாய் அரசு மருத்துவமனமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்பு தற்போது எம்பாமிங் செய்யப்பட்ட பிறகு திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் அங்கு இருந்து விமானம் மூலமாக இந்தியா கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இறப்புச் சான்றிதழ்
ஆனால் இறப்புச் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும், பேரதபரிசோதனை அறிக்கையினையும் தற்போது வரை ஸ்ரீதெவி குடும்பத்திடம் அளிக்கப்படவில்லை என்றும் இவை எல்லாம் அளிக்கப்பட்ட பின்பு தான் காவல் துறை விமானம் மூலம் இந்தியா கொண்டு செல்ல அனுமதி அளிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
விமானம்
நடிகை ஸ்ரீதேவி உடல் இந்தியா செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று தெரிந்த உடன் நேற்று மாலை 3 மணி அளவில் மும்பை விமான நிலையத்தில் இருந்து அவரது குடும்ப நண்பரான அனில் அம்பானியின் விமானம் ஒன்று துபாய் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளது.
ஸ்ரீதேவி
அனில் அம்பானியின் பிரைவேட் விமானத்தில் தான் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்பட உள்ளது. திங்கட்கிழமை இரவு 7 மணிக்குள் இந்தியா கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications