டெல்லி: பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவது கடினமான காரியம் என்றும் இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நிறைய அரசியல் சிக்கல்கள் உள்ளன என்றும் அருண் ஜேட்லி சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வைர வியாபாரிகள் செய்துள்ள மிகப் பெரிய மோசடியினை அடுத்துப் பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது குறித்தும் பல விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பின்வாங்கிய நிறுவனர்கள்
பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்க வேண்டும் என்று கூறி வந்த ஆதி கோத்ரேஜ், உதயக் கோட்டக் மற்றும் ரஷீஷ் ஷா உள்ளிட்டோரும் தற்போது தங்கலது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டனர்.
அருண் ஜேட்லி
தங்களிடம் நிறைய நபர்கள் பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கல் குறித்து விவாதித்து வந்ததாகவும் ஆனால் இதில் உள்ள சட்ட சிக்கல், அரசியல் கருத்துக்கள் போன்றவற்றைப் பார்த்துவிட்டுப் பின் சென்றுள்ளனர் என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
பொதுத் துறை வங்கிகள்
பொதுத் துறை வங்கிகளின் நிலை மிக மோசமாக உள்ள நிலையில் மத்திய அரசுக்கும் இதனைத் தனியார்மயம் ஆக்குவது என்று தெரிவில்லை என்று அருண் ஜேட்லி சர்வதேச வணிகர்கள் மாநாடு ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications