சர்வதேச அளவில் உள்ள முக்கிய எல்ஈடி/ஓஎல்ஈடி டிவி உற்பத்தி நிறுவனங்களான சோனி, எல்ஜி, பேனாசானிக் மற்றும் சாம்சங் உள்ளிட்டோர் 7 சதவீதம் வரை விலை உயர்த்த இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் சிறிய அளவில் விற்பனை பாதிக்கப்படும் என்று கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுங்க வரி
சோனி, எல்ஜி, பேனாசானிக் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மத்திய அரசு சுங்க வரியினை உயர்த்தியுள்ளதால் தான் டிவியின் விலை உயர இருப்பதாகத் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பிரிட்ஜ், ஏசி போன்ற பொருட்களின் விலையினை மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்கனவே உயர்த்தியுள்ளனர்.
பானாசோனிக்
பானாசோனிக் நிறுவனம் எல்ஈடி/ஓஎல்ஈடி டிவி விலையில் 2 முதல் 7 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. சுங்க வரி உயர்வால் தான் இந்த விலை உயர்வு முடிவு என்று பானாசோனிக் நிறுவனத்தின் இந்திய பிஸ்னஸ் பிரிவு தலைவரான நீரஜ் பால் தெரிவித்துள்ளார்.
சாம்சங்
சாம்சங் நிறுவனம் தங்களது எல்ஈடி/ஓஎல்ஈடி டிவி தயாரிப்புகளின் விலையில் 5 முதல் 6 சதவீதம் வரை விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எல்ஜி
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனரான கி வான் கிம் தங்களுக்கும் விலை ஏற்றம் செய்வதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று கூறியுள்ளார். விலை ஏற்றுவது குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு
மத்திய அரசானது இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான சுங்க வரியினை 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமான 2018-ம் ஆண்டின் பட்ஜெட்டில் உயர்த்தியுள்ளது. அதே நேரம் எல்சிடி/எல்ஈடி/ ஓஎல்ஈடி டிவிகள் மீதான சுங்க வரியினை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியாளர்கள்
மறுபக்கம் உள்நாட்டு டிவி உற்பத்தியாளர்கள் நிறுவனங்களில் டிவி விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications