ஹோலி பண்டிகையினை முன்னிட்டு கோஏர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இரண்டு சலுகைகளை அறிவித்துள்ளன. கோஏர் நிறுவனம் 991 ரூபாய் முதல் விமானப் பயணத்தினையும், ஜெட் ஏர்வேஸ் 20 சதவீத கட்டண சலுகையினையும் அறிவித்துள்ளது.
எனவே ஹோலி பண்டிகைக்காக இரண்டு நிறுவனங்களும் அளித்துள்ள ஆஃபர்கள் குறித்த தகவல்களை விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
ஹோலி லாங் வீக்கெண்டு
கேஏர் நிறுவனம் ஹோலி லாங் வீக்கெண்டு என்ற பெயரில் விமான டிக்கெட்களை 991 ரூபாய் முதல் அளிப்பதாக அறிவித்துள்ளது. அதிலும் எச்டிஎப்சி கார்டு பயன்படுத்தி டிக்கெட் புக் செய்தால் கூடுதலாக 20 சதவீத சலுகை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சலுகை விலையில் டிக்கெட்களை இணையதளத்தில் இருந்து மட்டுமே பெற முடியும்.
வழித்தடங்கள்
கோஏர் நிறுவனம் ரூ.991-க்குப் பகோத்ராவில் இருந்து கவுகாத்தி செல்லலாம் என்று அறிவித்துள்ளது. கொச்சி - சென்னை ரூ.1,120 ரூபாய் என்றும், பெங்களூரு - கொச்சி 1,921 ரூபாய் என்று டிக்கெட் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேட் ஏர்வேஸ்
பிப்ரவரி 26-ம் தேதி புக் செய்தால் 2018 ஏப்ரல் 15 வரை உள்நாட்டு விமானப் பயணக் கட்டணங்களில் 20 சதவீத சலுகை பெறலாம் என்று அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications