வங்கி கணக்கு, மொபைல் எண் போன்ற பலதரப்பட்ட சேவைகளில் 2018 மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து வியாழக்கிழமை விசாரித்த தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அந்த மனுவை நிராகரித்துவிட்டனர்.
விசாரணை
எனினும் ஆதார் சட்டம் 2016 குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான தீர்ப்பு வரும் போது நடைமுறையில் உள்ள சிக்கல்கள் குறித்து முடிவுகளுக்குத் தீர்வு கான நீதிமன்றம் வழிவகைச் செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
எதிர்தரப்பினர்
ஆதார் கார்டு சேவையினை எதிர்த்து வருபவர்கள் ஆதார் சட்டம் 2016-ஐ முழுமையாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆதார் விவரங்கள் மூன்றாம் நபர்களுக்கு அளிக்கப்படதாகவும், இதனை வைத்து வியாபாரம் செய்து வருவதாக எதிர்தரப்பினர் தங்களது வாதங்களை வைத்து வருகின்றனர். அதற்கு நேர்மாறாக இந்திய தனிநபர் அடையாளை ஆணையம் அவ்வளவு எளிதாக ஆதார் விவரங்களை யாராலும் திருடி விற்று மோசடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை
மேலும் ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்றும், தனியார் வசம் ஆதார் சேவைகளை அளிக்கக் கூடாது என்றும் ஒரு தரப்பினை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
காலக்கெடு
உச்ச நீதிமன்றம் தற்போது ஆதார் எண் இணைப்புகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்காததால் 2018 மார்ச் 31-க்குள் வங்கி கணக்கு, இன்சூரன்ஸ், மொபைல் எண் போன்ற சேவைகளைத் தொடர்ந்து பெற ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக உள்ளது. ஒருவேலை இணைக்கவில்லை என்றால் இந்தச் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications