விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஒரே மாதிரியான மற்றும் சரியான விலைகிடைக்க , மத்திய அரசு நாடு தழுவிய "இ-நேஷனல் அக்ரிகல்ச்சர் மார்க்கெட்" எனும் ஒரு வெப்சைட்டை (www.enam.gov.in) வடிவமைத்திருக்கிறது. இதுதான் சுருக்கமாக eNAM.

விவசாயிகளின் நலன் கருதி, இந்த வெப்சைட்டானது பல வசதிகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக விலைப்பட்டியல், வெவ்வேறு வேளாண் பொருட்களின் வரவு விவரம், எளிதில் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான அனைத்து விதமான அமைப்புகளையும் கொண்டதாக இது விளங்குகிறது.
குறிக்கோள்
கீழ்க்காணும் குறிக்கோள்களுடன் இந்த வெப்சைட்டானது உருவாக்கப்பட்டுள்ளது,
1. ஒளிவு மறைவின்றி நல்ல விலை கிடைக்க வழிவகுத்தல்.
2. வர்த்தகர்களுக்கு மாநிலம் முழுமைக்கும் ஒரே வர்த்தக லைசென்ஸ் (License) வழங்குதல்
3. பொருட்களுக்கான வரியை ஒரே இடத்தில் வசூல் செய்தல்.அதாவது , விவசாயிகளிடமிருந்து வர்த்தகர்கள் கொள்முதல் செய்யுமிடம்.
4. பொருட்களின் தர மேம்பாடு ஒருங்கிணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு
இந்த வெப்சைட்டின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு கீழ் உள்ள மாற்றங்களைச் சமீபத்தில் செய்துள்ளது,
புதிய மாற்றங்கள்
இவ்வெப்சைட்டை விவசாயிகளுக்கு எளிதாக்கும் குறிக்கோளுடன் புதிய அம்சங்களுடன் இதை மீண்டும் கீழுள்ள வசதிகளுடன் மாற்றியமைத்துள்ளது,
1. பொருட்களை ஏலம் விட்டவுடன் விவசாயிகளுக்கு வேகமான மற்றும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்காகப் பீம் (BHIM),யூபிஐ (UPI) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,
2. இ.என்.ஏ.எம். (eNAM) இணையத்தளம் இப்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தவிரக் குஜராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி மற்றும் ஒடியா போன்ற பிற மொழிகளிலும் கிடைக்கிறது.
3. விவசாயிகளின் டேட்டாபேஸ் (Data Base) மற்றும் இணைய-கற்றல் முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
4. MIS டாஷ்போர்டுகள் சிறந்த பகுப்பாய்விற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
5. இது தொடர்பான ஆப்- ல் ஒரு முக்கியக் 'கேட் நுழைவு' அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
6. விவசாயிகளின் கருத்தை பதிவு செய்யும் வசதி, நேரடி ஏலம் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் இந்த ஆப்-ல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications