தாய் நாட்டை விட்டு ஒருவன் வெளியேறி வெளிநாடுகளில் வேலைக்குச் செல்கிறான் என்றால் அது கண்டிப்பாக அதிகச் சம்பளம் வாங்க வேண்டும் என்பதற்காகவே இருக்கும்.
அன்மையில் எச்எஸ்பிசி வங்கி இண்டர்னேஷ்னல் நடத்திய ஆய்வில் இந்தியாவின் நிதி, வணிக மற்றும் பொழுதுபோக்குகளின் தலைநகரான மும்பையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தான் அதிகச் சம்பளம் பெறுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
மும்பை
வெளிநாட்டில் இருந்து மும்பை வந்து வேலை செய்யும் போது சராசரியாக ஆண்டுக்கு 217,165 டாலர் சம்பளம் பெறுவதாகவும் இது உலகளவில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் சம்பள சராசரியான 99,903 டாலர் உடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்குகளுக்கும் அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.
உலக நாடுகள்
பிற ஆசிய நகரங்களுடன் ஒப்பிடும் போது மும்பையில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தான் அதிகளவில் சம்பளம் அளிக்கப்படுகிறது. உலகளவில் மும்பை முதல் இடத்திலும், சான் பிரான்சிஸ்கோ இரண்டாவது இடத்திலும், ஜூரிச் 3 வது இடத்திலும், சாங்காய் 4வது இடத்தினையும், ஜெனிவா 5ம் இடத்தினையும் பிடித்துள்ளது.
நிதி மற்றும் தொழில்நுட்ப பணி
மும்பைக்கு அடுத்தபடியாக அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் உள்ள நிதி மற்றும் தொழில்நுட்ப பணிகளைத் தான் வெளிநாட்டவர்கள் அதிகளவில் விரும்பித் தேர்வு செய்வதாகவும் எச்எஸ்பிசி ஆய்வு கூறுகிறது.
அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நகரங்கள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக அளவில் வேலை அளிக்கும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நகரங்கள் என்றால் சான் பிராசிஸ்கோ, லண்டன், நியூ யார்க், டூபிலின், பர்மிங்காம் ஆகியவை ஆகும்.
சுவிஸ்ர்லாந்து
மும்பைக்கு முன்பு சுவிஸ்ர்லாந்தில் இருந்து இரண்டு நகரங்களில் உலகளவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் அளிக்கும் நகரங்களாக இருந்து வந்தன.
கடைசி இடம்பிடித்துள்ள நாடுகள்
எச்எஸ்பிசி வெளியிட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த 52 நாடுகளின் சர்வே முடிவில் பெர்லின் மற்றும் ப்ராக் நாடுகள் தான் கடைசியில் உள்ளன.
ஆச்சர்யம்
உள்நாட்டில் அதிகளவில் வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் வெளிநாடுகளுக்கு அதிகளவில் இந்தியர்கள் கூலி வேலைக்குச் செல்லும் அதே வேலையில் பிற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் அளிப்பதில் சர்வதேச அளவில் மும்பை தான் முதலிடம் என்பது ஆச்சர்யமாக உள்ளது.


Click it and Unblock the Notifications