சாம்சங் உடன் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணி.. புதிய திட்டத்துடன் முகேஷ் அம்பானி..!

நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான உருவெடுத்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுவதும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் நெட்வொர்க்-ஐ அமைக்க உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் உடன் இணைந்துள்ளது.

99 சதவீத மக்கள் தொகை

99 சதவீத மக்கள் தொகை

இந்தியாவின் 99 சதவீத மக்கள் தொகையை நெட்வொர்க் வசதிகளைக் கொண்டு சேர்க்கும் வரையில் ஜியோ மற்றும் சாம்சங் கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இக்கூட்டணி நாட்டின் டெலிகாம் நெர்வொர்க் கப்பாசிட்டியையும் உயர்த்தும் பணியில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளது.

 

இன்டர்நெட் ஆப் திங்ஸ் நெட்வொர்க்

இன்டர்நெட் ஆப் திங்ஸ் நெட்வொர்க்

இந்தியாவில் இன்டர்நெட் ஆப் திங்ஸ் நெட்வொர்க் அமைப்பதன் மூலம் வாகன டிராக்கிங், ஸ்மார்ட் அப்ளையன்சஸ், ஸ்மார்ட் மீட்டரிங், செக்யூரிட்டி மற்றும் கண்காணிப்பு ஆகிய நுகர்வோர் மற்றும் என்டர்பிரைசர்ஸ் சேவைகளைக் கொண்டு வர முடியும்.

ஜியோ வாடிக்கையாளர்கள்

ஜியோ வாடிக்கையாளர்கள்

இப்புதிய கூட்டணி குறித்துச் சாம்சங் நெட்வொர்க் வர்த்தகத் தலைவர் யங்கி கிம் கூறுகையில், ஜியோவுடன் கூட்டணி வைத்ததிலும் அதன் அதிரடி வளர்ச்சியில் பங்கெடுத்ததும் மகிழ்ச்சி. மேலும் ஜியோ வாடிக்கையாளர்களுக்க மேம்பட்ட சேவையை அளிக்கப்படும் என்பதை இந்தக் கூட்டணியில் மூலம் உறுதி செய்கிறோம்.

கவனம்

கவனம்

2018ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே ஜியோ இன்டர்நெட் ஆப் திங்ஸ் துறையில் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தத் துவங்கியது. இதன் அடிப்படையிலேயே ஜியோ நிறுவனத்தின் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி பிரிவின் தலைவராக ஆயுஷ் சர்மா நியமிக்கப்பட்டார்.

இதன் வாயிலாகத் தற்போது புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

 

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

இதுமட்டும் அல்லாமல் தற்போது ஜியோ மொபைல் எட்ஜ் கம்பியூடிங், டிஸ்ட்ரிபியூடெட் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக்செயின் ஆகிய துறைகளில் இறங்கியுள்ளது.

புதிய சேவை

புதிய சேவை

ஜியோவின் மொபைல் சேவைக்கு அடுத்தகட்டமாகத் தற்போது எண்டர்பிரைஸ் சேவைகளான பைபர் டூ ஹோம் சேவையின் சோதனை ஒட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

இந்தச் சேவையுடன் பல்வேறு இணைப்பு சேவைகளையும் ஜியோ வழங்க முடிவு செய்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+