வேலைவாய்ப்புத் தேடுவதற்கு ஏற்ற ஒரு சமுக வலைத்தளம் என்ற பெயரை பெற்றுள்ள லின்க்டுஇன் போன்று பேஸ்புக் நிறுவனம் நீண்ட காலமாகவே மாறத் துடிக்கிறது. எனவே லின்க்டுஇன்-க்குப் போட்டியாகப் புதன்கிழமை பேஸ்புக் நிறுவனம் 40 நாடுகளில் வேலை வாய்ப்பு தேடும் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.

2011-ம் ஆண்டு முதல் பேஸ்புக் நிறுவனம் உள்ளூர் வணிகங்களுக்கு உதவ மற்றும் வேலை வாய்ப்பு தேடல் விவரங்களை வழங்க மட்டும் 1 பில்லியன் டாலர் வரை செலவு செய்துள்ளது. அதே போன்று மீண்டும் ஒரு முறை 2018-ம் ஆண்டு ஒரு பெறும் தொகையினைப் பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லின்க்டுஇன் போன்று வேலை வாய்ப்பு தேடல் சேவையினை வழங்குவதால் 1.1 பில்லியன் டாலர் வரை வருவாய் பெற முடியும் என்று எதிர்பார்க்கிறது. இதனால் பெரிய நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் சிறிய அளவில் உள்ளூரில் வணிகம் செய்பவர்களுக்கும் எளிதாக வேலைக் கிடைக்கப் பேஸ்புக் உதவும் என்று கூறுகின்றனர்.
அமெரிக்காவில் பேஸ்புக் மூலமாக 4 நபர்களுக்கு ஒருவர் தேடுவதாகத் தரவுகள் கூறும் நிலையில் 40 சதவீத வணிகர்கள் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களைப் பதிவேற்ற கடினமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
2016-ம் ஆண்டு முதல் பேஸ்புக் நிறுவனம் 'ஜாப்ஸ் ஆன் பேஸ்புக்' என்ற சேவையினை அமெரிக்கா மற்றும் கனடாவில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வந்தது. தற்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தச் சேவை பிப்ரவரி 28 முதல் கிடைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications