இந்தியாவின் ஜிடிபி அக்டோபர் - டிசம்பர் வரையிலான 3ம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட வேகமாக உயர்ந்து 7.2 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. பணமதிப்பு நடவடிக்கைக்குப் பிறகு 5.7 சதவீதம் வரை சரிந்த ஜிடிபி உயர்ந்துள்ளதால் மோடி அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
சீனாவின் 6.8 சதவீதம் அல்லது இணையான ஜிடிபி வளர்ச்சியை இந்தியா பெறுமா என்று எதிர்பார்த்த நிலையில் 7.2 சதவீதம் பெற்று வேகமாக வளரும் பொருளாதாரம் படைத்த நாடு என்பதை இந்தியா நிருபித்துள்ளது.
வளர்ச்சி அடைந்த முக்கியத் துறைகள்
விவசாயம், காடு மற்றும் மீன்பிடித்தல் துறை 3 சதவீதமும், சுரங்கம் மற்றும் குவாரி துறை 3 சதவீதமும், உற்பத்தித் துறை 5.1 சதவீதமும், கட்டுமான துறை 4.3 சதவீதமும் வளர்ச்சியினைப் பெற்றுள்ளது.
2015
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6.8 சதவீதமாக இருந்த ஜிடிபி ஜூலை மாதம் 7.6 சதவீதமாகவும், டிசம்பர் மாதம் 8.4 சதவீதமாக இருந்தது.
2016
பின்னர் 2016 ஜனவரியில் 7.4 சதவீதமாகச் சரிந்து இருந்தது. அதிகபட்சமாக ஜூன் மாதம் 9.2 சதவீதமாகவும், செப்டம்பர் மாதம் 7.9 சதவீதமாகவும், டிசம்பர் மாதம் 7.5 சதவீதமாகவும் இருந்தது.
2017
பணமதிப்பிழக்கம் செய்த பிறகு தொடர்ந்து சரிந்து வந்த இந்தியாவின் ஜிடிபி 2017 ஜூலை மாதம் 5.7 சதவீதமாக இருந்தது. ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு நிதானமாக உயர்ந்து செப்டம்பர் மாதம் ஜிடிபி 6.5 சதவீதமாக இருந்தது. தற்போது ஜனவரி மாதம் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications