இந்தியாவின் வளர்ச்சியைப் பதம் பார்க்கும் வகையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றின் தாக்கங்களைத் தனிக்கும் வகையில் மோடி அரசு அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் அதிகளவிலான செலவுகளைச் செய்தது.
இதன் காரணமாக 2017ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் உற்பத்தி மற்றும் சேவை துறை கணிசமான அளவில் வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்தியா - சினா
இந்த வளர்ச்சி மூலம் 2016ஆம் ஆண்டில் இந்தியா இழந்த, வேகமாக வளர்ச்சி அடையும் நாடு என்ற பெருமையை மீண்டும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை முடிவு
அக்டோபர் - டிசம்பர் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி தரவுகளை இன்று மாலை 5.30 மணிக்கு மத்திய அரசு வெளியிடுகிறது. இந்த முடிவுகளுக்காக இந்திய முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் ஆர்வமுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
வாக்கெடுப்பு
ரெயூட்டர்ஸ் நடத்திய வாக்கெடுப்பில் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி சராசரியாக 6.9 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இது 2017ஆம் ஆண்டிலேயே மிகவும் அதிகமான வளர்ச்சி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்காலாண்டில் நாட்டின் வளர்ச்சி அளவு 6.4 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதம் வரையில் இருக்கும் எனவும் இந்த வாக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
சீனா
2017ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் சீனா 6.8 சதவீதம் வரையிலான ஜிடிபி வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியா இக்காலாண்டில் 6.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து செய்தால் 2016இல் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க முடியும்.
3வது காலாண்டு
2017ஆம் ஆண்டில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணமதிப்பிழப்பு அறிவிக்காத முன்பு நாட்டின் வளர்ச்சி 8 சதவீதம் வரையில் உயர வாய்ப்புகள் சூழ்ந்து இருந்தது. ஆனால் இப்போது நிலை முற்றிலும் மாறுப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications