ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக பிஎப் பணத்தினை திரும்ப பெற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்!

ஓய்வூதிய நிதி நிறுவனமான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பேப்பர் இல்லா பரிவர்த்தனையினை ஊக்குவிக்க 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பிஎப் பணத்தினைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் இணையதளம் வாயிலாக மட்டுமே கோரிக்கை வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

1995-ம் ஆண்டு ஊழியர்கள் பென்ஷன் திட்டம் கீழ் உள்ளவர்களும் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பிஎப் பணத்தினைப் பெற வேண்டும் என்றாலும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தற்போதைய நிலை

தற்போதைய நிலை

தற்போது ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் இணையதளம் மற்றும் ஆப்லைன் என்ற இரண்டு வழிகளிலும் பிஎப் பணத்தினைத் திரும்பி அளித்து வருகிறது.

10 லட்சம் ரூபாய்

10 லட்சம் ரூபாய்

2018- ஜனவரி 17-ம் தேதி மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 10 லட்சத்திகும் அதிகமாகப் பிஎப் தொகையினைத் திரும்பப் பெற இணையதளம் மூலமாக மட்டுமே கோரிக்கை வைக்க முடியும் என்று முடிவு எடுக்கப்பட்டதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

பிஎப் கணக்கில் 6 கோடி நபர்கள் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கார்பஸ் தொகையினை வைத்துள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

 

ஆதார் மற்றும் வங்கி கணக்கு

ஆதார் மற்றும் வங்கி கணக்கு

இணையதளம் மூலமாகப் பிஎப் பணத்தினைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் யூஏஎண்-ஐ ஆக்டிவேட் செய்து அதனுடன் ஆதார் மற்றும் வங்கி கணக்கினை இணைக்க வேண்டும். இவை அனைத்தும் செய்த பிறகு தான் இணையதளம் மூலமாகப் பிஎப் பணத்தினைத் திரும்பப் பெற முடியும்.

யூஏஎண் ஆக்டிவேட் செய்வது எப்படி?

யூஏஎண் ஆக்டிவேட் செய்வது எப்படி?

யூஏஎண் ஆக்யிவேட் செய்ய https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைப்பிற்குச் சென்று ஆக்டிவேட் யூஏஎண் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

தேவையான விவரங்கள்

தேவையான விவரங்கள்

யூஏஎண் ஆக்யிவேட் செய்யப் பிஎப் கணக்கில் யூஏஎண் அல்லது பிஎப் ஐடி அல்லது ஆதார் எண் அல்லது பான் எண் கண்டிப்பாகத் தேவைப்படும். பின்னர்ப் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் கேப்ச்சாவை உள்ளிட்டுப் பின் எண் உருவாக்குவதன் மூலமாக யூஏஎண் அக்டிவேட் செய்யப்படும்.

உள்நுழைதல்

உள்நுழைதல்

பின்னர் மீண்டும் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள் யூஏஎண் மற்றும் மொபைல் எண்ணிற்கு வந்த கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். இங்கு உங்களது KYC விவரங்களில் வங்கி கணக்கு எண், பான் எண் மற்றும் ஆதார் எண்ணைச் சமர்ப்பித்து 30 நாட்களுக்குள் பிஎப் பணத்தினைப் பெற அனுமதி அளிக்கப்படும்.

பணத்தினை எடுத்தல்

பணத்தினை எடுத்தல்

அதார் எண் இணைக்கப்பட்டால் மட்டுமே பிஎப் பணத்தினைப் பெற முடியும். ஆதாரில் உள்ள பெயரும் வெவ்வேறாக இருந்தாலும் பணத்தினைத் திரும்பப் பெற முடியாது. இதையும் இந்தத் தளத்தினிலேயே மாற்றக் கோரிக்கை வைக்க முடியும். பணத்தினைத் திரும்பப் பெறவும் யாருடைய உதவியும் இல்லாமல் இந்தத் தளத்தில் உதவியுடன் வங்கி கணக்கிற்குப் பணத்தினை 30 நாட்களுக்குப் பெறவும் முடியும்.

 பேப்பர் லஸ்

பேப்பர் லஸ்

2018 ஆகஸ்ட் 15-ம் தேதிக்குப் பிறகு வருங்கால வைப்பு நிதி ஆணையம் முழுமையாகப் பேப்பர் இல்லாமல் இயங்கு நிலைக்கு மாற்றப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+