நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை 0.10-0.50 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்துச் சந்தையில் இருக்கும் பிற வங்கிகளும் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
45 நாள் வைப்பு
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது இணையதளத்தில் இன்று வெளியிட்ட அறிவிப்பின் பிடி 45 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதி மீதான வட்டியை 5.25 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
1 வருட வைப்பு
அதேபோல் ஒரு வருட வைப்பு நிதி மீதான வட்டியை 6.25 சதவீதத்தில் இருந்து 6.40 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது. 2 முதல் 10 வருட முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிக்கு 6இல் இருநந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள்
மேலும் மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதியின் மீது 6.50 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனுடன் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல்க் டெப்பாசிட் மீதும் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28
இப்புதிய வட்டி விகிதம் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படும் எனவும் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் வைப்பு நிதியை செய்யும் மக்களுக்குக் கூடுதலான வட்டி வருமானம் கிடைக்கும்.
பிற வங்கிகள்
எஸ்பிஐ வங்கியைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கர்நாடகா வாங்கியும் வைப்பு நிதி மீதான வட்டியை உயர்த்தியுள்ளது.
அடுத்தச் சில வாரங்களில் இந்தியாவில் இருக்கும் பிற வங்கிகளும் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications