2018-ம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவினை அடுத்துப் பல புதிய கார் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனவே 2018-ம் ஆண்டின் பிப்ரவை மாதம் எந்த நிறுவனம் எவ்வளவு கார்களை விற்றுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.
மாருதி சுசூகி
இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி பிப்ரவரி மாதம் 1,49,824 கார்களை விற்றுள்ளது. இது 2017-ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் விற்பனை செய்யப்பட்ட 1,30,280 கார்களுடன் ஒப்பிடும் போது 15 சதவீத உயர்வாகும். இந்தியாவில் மட்டும் 1,37,900 கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு இந்தியாவில் 1,20,599 கார்களை விற்பனை செய்து இருந்தது.
மகேந்திரா & மகேந்திரா
மகேந்திரா நிறுவனம் 2017 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 19 சதவீதம் விற்பனை உயர்வைச் சந்தித்துள்ளது. 2017-ம் ஆண்டு 42,826 கார் விற்பனை செய்த நிலையில் 2018-ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் 51,127 கார்களை மகேந்திரா விற்பனை செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக 38 சதவீத விற்பனை உயர்வை பிப்ரவரி மாதம் பெற்றுள்ளது. 2017 பிப்ரவரி மாதம் 42,679 கார்கள் விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ் நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் 58,993 கார்களை விற்பனை செய்துள்ளது. யூவி கார் பிரிவு விற்பனையில் மட்டும் 165 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
டொயாட்டா இந்தியா
டொயாட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பிப்ரவரி மாதம் 12,705 கார்களை விற்பனை செய்துள்ளதாகவும் இதுவே சென்ற ஆண்டுப் பிப்ரவரியில் 12,113 கார்கள் விற்பனை செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. டொயாட்டா இந்தியாவின் விற்பனை 4.88 சதவீதமாகப் பிப்ரவரி மாதம் அதிகரித்துள்ளது.
ஃபோர்டு இந்தியா
போர்டு இந்தியா நிறுவனத்திற்கு 2017 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 2018-ம் ஆண்டு 1 சதவீதம் வரை விற்பனை சரிந்துள்ளது. சென்ற ஆண்டு 24,026 கார்களை விற்பனை செய்து ஃபோர்டு இந்தியா 2018 பிப்ரவரி மாதம் 23,965 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு விற்பனை 8 சதவீதம் அதிகம் தான் என்றாலும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ததில் தான் ஃபோர்டு நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications