இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ ஒரு வருடத்திற்கு முன்பு தனது டிஜிட்டல் வர்த்தகத்தையும், சேவைத் திறனையும் உயர்த்துவதற்காக அப்பிரியோ என்னும் நிறுவனத்தை வாங்கியது.
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து கிரிஸ் பார்பின், விப்ரோ கைப்பற்றிய பின்பும் தொடர்ந்து அதே பதவியில் இருந்தார்.
புதிய வாய்ப்பு
இந்நிலையில் அப்பிரியோ மட்டும் அல்லாமல் மொத்த விப்ரோ நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் தரத்தை உயர்த்தும் வகையில் இந்நிறுவனத்தின் குளோபல் கல்ச்சர் ஆப்பிசர் என்னும் புதிய பதவியை ஏற்க உள்ளார் கிரிஸ் பார்பின்.
விரைவில்
நான் அப்பிரியோ நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து விப்ரோ நிறுவனத்தின் குளோபல் கல்ச்சர் ஆப்பிசர் இணையப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களில் அறிவிப்பேன் எனப் பார்பின் தனது பிளாகில் தெரிவித்துள்ளார்.
குளோபல் கல்ச்சர் ஆப்பிசர்
விப்ரோ குளோபல் கல்ச்சர் ஆப்பிசராக இருக்கப்போகும் பார்பின் விப்ரோ நிர்வாகக் குழுவிலும், போர்டு ஆஃப் டைரக்டஸ் குழுவிலும், விப்ரோ நிறுவனத்தின் செயல்திறனை மாற்றி அமைக்கும் சிறிய மற்றும் திறன் வாய்ந்த குழுவிலும் இருக்கப்போகிறார்.
டிஜிட்டல்
இப்புதிய பணியின் மூலம் விப்ரோ நிறுவனத்தின் செயல்திறன் உயர்வது மட்டும் அல்லாமல் புதிய தொழில்நுட்ப மற்றும் சிஸ்டம் மூலம் அடுத்த டிஜிட்டல் புரட்சியைக் கொண்டு வர உள்ளார் பார்பின்.


Click it and Unblock the Notifications