இந்திய மென்பொருள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான காக்னிசென்ட் 2017ஆம் ஆண்டில் சுமார் 8,000 ஊழியர்களைச் சத்தமே இல்லாமல் வெளியேற்றியுள்ளது.
இதே காலக்கட்டத்தில் காக்னிசென்ட் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.
இந்தியா
2017ஆம் ஆண்டில் முடிவில் காக்னிசென்ட் உலகம் முழுவதும் இருக்கின்ற தனது அலுவலகங்களில் சுமார் 2,60,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 1,80,000 என்பது குறிப்பிடத்தக்கது.
இதே 2016ஆம் ஆண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,60,000ஆகவும் இந்தியாவில் 1,88,000 ஊழியர்களைக் கொண்டு இயங்கியது காக்னிசென்ட்.
அமெரிக்கா
2017ஆம் ஆண்டில் காக்னிசென்ட் நிறுவனத்தின் அமெரிக்க அலுவலகத்தில் 2900 பேர் அதிகரிக்து 50,400 பேராகவும், ஐரோப்பாவில் 2300 பேர் அதிகரித்துள்ளனர்.
முதல் முறையாக
இந்திய ஐடி நிறுவனங்களின் காக்னிசென்ட் உட்படப் பெரும்பாலான ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது இதுவே முதல் முறை.
என்ன காரணம் தெரியுமா..?
காரணம்
ஆட்டோமேஷன் மற்றும் விசா பிரச்சனைகளுக்காக வெளிநாட்டில் இருக்கும் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு அந்நாட்டு மக்களைப் பணியில் அமர்த்தியதே இந்த நிலைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
10,00,000 வேலைவாய்ப்புகள்
2019ஆம் நிதியாண்டில் மட்டும் இந்திய ஐடித்துறையில் சுமார் 10,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளார் நாஸ்காம் தலைவர் ஆர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
2018ஆம் நிதியாண்டில் வெறும் 1,50,000 வேலைவாய்ப்புகளை மட்டுமே ஐடித்துறையில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு
ஈஎம்ஐ உயரும் அபாயம்


Click it and Unblock the Notifications