2017 டிசம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயு எனப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து வந்த நிலையில் 2018 மார்ச் 1 முதல் குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருந்தது பிப்ரவரி மாதம் சற்று குறைந்துள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட இடங்களில் என்ன விலை என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர்கள் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே எல்பிஜி சிலிண்டர்கள் விலை இன்று முதல் எவ்வளவு குறைந்துள்ள என்று விளக்கமாக இங்கு பார்க்கலாம்.
மானிய விலையில் அளிக்கப்படும் சிலிண்டர்கள் விலை
மானிய விலையில் விற்கப்படும் சிலிண்டர்கள் விலை 2.42 ரூபாய் முதல் 2.55 ரூபாய் வரை சரிந்துள்ளது.
| டெல்லி | கொல்கத்தா | மும்பை | சென்னை | |
|---|---|---|---|---|
| 1 Mar 2018 | 493.09 | 496.07 | 490.8 | 481.21 |
| 1 Feb 2018 | 495.64 | 498.49 | 493.35 | 483.71 |
| விலை எவ்வளவு குறைந்தது? | -2.55 | -2.42 | -2.55 | -2.5 |
மானியம் இல்லா சிலிண்டர் விற்பனை
இந்தியாவில் மானியம் இல்லா சிலிண்டர்கள் அதிகபட்சமாக 47 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
| டெல்லி | கொல்கத்தா | மும்பை | சென்னை | |
|---|---|---|---|---|
| 1 Mar 2018 | 689 | 711.5 | 661 | 699.5 |
| 1 Feb 2018 | 736 | 757 | 708 | 746 |
| விலை எவ்வளவு குறைந்தது? | -47 | -45.5 | -47 | -46.5 |
19 கிலோ சிலிண்டர் விலை நிலவரம்
19 கிலோ சிலிண்டர் விலை அதிகபட்சமாக 80.5 ரூபாய் வரை குறைந்துள்ளது.
| டெல்லி, | கொல்கத்தா | மும்பை | சென்னை | |
|---|---|---|---|---|
| 1 Mar 2018 | 1230 | 1270.5 | 1181 | 1307 |
| 2 Feb 2018 | 1308.5 | 1347.5 | 1260 | 1387.5 |
| விலை எவ்வளவு குறைந்தது? | -78.5 | -77 | -79 | -80.5 |


Click it and Unblock the Notifications