இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காகப் போராடி வருவதாகவும் அதிலும் புதிதாக வந்துள்ள நிறுவனங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம் என்று இருப்பதை டிராய் கண்டு கொள்வாதாகத் தெரியவில்லை என்றும் அதனால் நீதி மன்றத்தில் முறையிடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஏர்செல்
ஏர்செல் நிறுவனம் குறித்துக் கேட்ட போது இந்திய டெலிகாம் சந்தை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அதிலும் ஏர்செல் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் நிதி அளிக்க மறுத்துவிட்டதால் மூட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜியோ
இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் ரீசார்ஜ் பேக்குகள் மீது கொண்டு வந்துள்ள புதிய விதியானது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குச் சாதகமானதாக உள்ளது இவர்கள் இருவாரால் தான் இந்திய தொலைத்தொடர்பு துறை இந்த அளவிற்குப் பாதிப்பினை சந்தித்து வருவதாகவும் பிற டெலிகாம் நிறுவனங்கள் புலம்பி வருகின்றனர்.
டிராய்
டிராய் தலைவர் ஆர் எஸ் சர்மா செவ்வாய்க்கிழமை தாராலமாக டெலிகாம் நிறுவனங்கள் நீதிமன்றம் சென்று தீர்ப்பு வாங்கி வரட்டும் என்று கூறியுள்ளார். டிராய் இப்படிக் கூறியுள்ளது எங்களை ஏமாற்றம் அளிக்க வைத்துள்ளது. எவ்வளவு காலம் தான் கையில் இருந்து முதலீடு செய்வது என்று சுனில் மிட்டல் கூறிவருகிறார்.
டெலிகாம் நிறுவனங்கள்
மிட்டல் கையைக் கட்டிக்கொண்டு டெலிகாம் நிறுவனங்கள் வேடிக்கை பார்க்காது என்று கூறியுள்ள நிலையில் வோடாபோன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விட்டோரியோ அதனை ஆதரித்துள்ளார்.
பிப்ரவரி 16ம் தேதி டிராய் வெளியிட்டு புதிய விதிகளானது டெலிகாம் சந்தையில் 30 சதவீதத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்படியானதாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
வாடிக்கையாளர்கள்
ஜியோ நிறுவனத்திற்கு 13 முதல் 14 சதவீதம் வரையிலான சந்தை வருவாய் மற்றும் பயனர்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் - ஐடியா நிறுவனங்களுக்கு 30 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது. வாடிக்கையாளர்களை என்ன தான் தக்கவைத்துக்கொள்ள முயன்றாலும் புதிய விதிகள் ஜியோவிற்குச் சாதகமாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
போட்டி நிறுவனங்கள்
ஜியோ நிறுவனம் சேவை அளிக்கத் துவங்கியதில் இருந்து போட்டி நிறுவனங்களும் கோடி கணக்கில் முதலீடு செய்துள்ளதுடன் வாடிக்கையாளர்களுக்குப் பல விதமான சலுகைகளையும் வழங்கி வருகின்றன.
ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீட்டாளரான சிங்டெல் 2,649 கோடி ரூபாயினைச் சில மாதங்களுக்கு முன்பு முதலீடு செய்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறை என்ன தான் மோசமாக இருந்தாலும் ஏர்டெல் அதனை உடைத்து எரிந்து டாப் நிறுவனமாக இருக்கும் என்று சிங்டெல் இருக்கிறது. ஆனாலும் நாங்கள் அதிகப்படியான உத்தரவாதங்களைப் பங்குதார்களுக்கு அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சுனில் மிட்டல் கூறுகிறார்.
திவாலான ஏர்செல்
சிறு டெலிகாம் நிறுவனங்களைக் கையகப்படுத்த வேண்டும் என்றாலும் ஏர்செல் உட்பட யாரும் இல்லை என்றும் ஏர்செல் நிறுவனத்தினால் முறையாகச் சேவை வழங்க முடியாமல் விற்க முடியாது என்றும் முதலீட்டாளர்களும் கைவிட்ட நிலையில் திவால் ஆகப்பட்டதாக அறிவிக்க மனு அளித்துள்ளதாகவும் மிட்டல் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications