நிறுவனங்கள் நிலையான விடுமுறையைத் தங்களது ஊழியர்களுக்கு அளிக்கும் போதும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும் இவர்களது மனநிலை ஒரே மாதிரியான காரணங்கள் கொண்டிருப்பதாக, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நடத்திய ஒரு சர்வே தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் வளர்ந்த நாடுகளில் அப்படி இல்லை என்றும் ஊழியர்கள் விடுமுறை எடுப்பதாகவும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதாகவும், வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் செய்வதாகவும் கூறுகின்றனர். ஏன் இந்தியாவில் ஊழியர்கள் விடுமுறை எடுப்பதில்லை. இந்த மனநிலைக்கு என்ன காரணம் என்பதைப் பற்றி விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
இந்தியாவில் விடுப்பு எடுப்பது அவமரியாதையாகக் கருதப் படுகிறதா?
இந்தியாவில் சராசரியாக 17 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் சர்வே படி, 42 விழுக்காடு பணியாளர்கள் வேலை பலு காரணமாகவும், 26 விழுக்காடு பணியாளர்கள் வேலையில் சார்பு இருப்பதாலும், 30 விழுக்காட்டினர் விடுப்பு கேட்பதற்குப் பயப்படுகின்றனர் எனவும் கூறப்படுகின்றது. அதே சமயம் பெரும்பாலானோர் விடுப்பு கேட்பதோ எடுப்பதோ அவமரியாதையாகக் கருதுகின்றனர்.
அதீத வேலைப் பளு ஒரு காரணம்
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 20 மற்றும் 4 ஜனவரி 2018 ஆகிய இடைப்பட்ட தேதியில் இந்தியாவில் 2,006 பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்த தகவல் , 65 சதவீதம் பேர் கடந்த ஆண்டு இறுதியில் விடுமுறை நாட்களில் ஓய்வு பெறவில்லை என்றும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (55%) வேலைப் பளுவினால் விடுப்பு எடுக்க முடியவில்லை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
விடுமுறை அன்று ஏற்படும் கஷ்டங்கள்
60 சதவீதத்தினர் தான் எடுத்த விடுப்பை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றனர். அதில் 32 சதவீதத்தினர் எடுக்கும் விடுப்பு மிகக் குறைவாக உள்ளதாகக் கருதுகின்றனர். 11 சதவீதத்தினர் வேலைக்கே சென்றுவிடலாம் எனக் கருதும் மனநிலையில் உள்ளனர். மொத்தமுள்ள 59 சதவீதத்தினர் இன்னும் சில நாட்கள் சேர்த்து எடுத்திருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
வேலைப் பளு
வேலை செய்யும் பொறுப்புகள் மற்றும் மாறும் முன்னுரிமைகள் ஆகியவற்றின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் பல இந்தியர்கள் தங்களால் முழுமையான விடுப்பை எடுக்க முடிவதில்லை. டிசம்பர் மாதம்தான் விடுமுறை நாட்களைப் பயன்படுத்துவது பற்றி 16 சதவீத தொழிலாளர்கள் சிந்திக்கத் தொடங்குகின்றனர். விடுமுறை நாட்களில் தோராயமாக 97 சதவீதம், விடுமுறை நாட்களை அடுத்த வருடத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். அதில் 49 சதவீதம் வீட்டிலேயே செலவழிக்கிறார்கள், 34 சதவீதம் பொதுவாக வேலையில் சிக்கிக்கொள்வார்கள், 27 சதவீதம் தொழில்களை நிர்வாகப் பொறுப்புகள் தடுக்கின்றன என்று சர்வே கூறுகிறது.
விடுப்பு எடுப்பது கட்டாயம்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆசிய பசிபிக் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் வியாபார தலைவர் ரோப் வில்லியம்ஸ் என்ன கூறுகிறார் என்றால், அன்றாட வாழ்க்கையில் வேளைகளில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக்கொள்வது மிக அவசியம். ஆகையால் நாங்கள் விடுமுறையின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உண்மையில் புரிந்துகொள்கிறோம், அதனால் தான், இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு வெளிநாடுகளுக்குச் செல்ல இந்திய பயணிகளுக்கு நாங்கள் சிறந்த சலுகைகள் வழங்குகிறோம் என்கின்றார்.
காஸ்ட்லியான வீடு
நீர்வ மோடி
ஏர்செல்
சுனில் மிட்டல்


Click it and Unblock the Notifications