பில் கேட்ஸ் என்னும் பெயர் உலகின் மிகப்பெரிய பணக்காரன் என்பதன் வாயிலாகவே அதிகமானோருக்குத் தெரிந்திருக்கிறது, இதன் பின்பே அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர், மென்பொருள் வர்த்தகத்தையே மாற்றிய ஒரு சிறந்த வியாபாரி என்பதை அதன் பின்னர்த் தெரிந்துகொண்டவர்கள் ஏராளம்.
பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் தலைமையில் மைக்ரோசாப்ட் அதன் போட்டி நிறுவனங்களாக ஆப்பிள், ஐபிஎம் போன்ற முன்னணி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி சமானியர்களிடமும் தனது வர்த்தகத்தைக் கொண்டு சேர்த்ததன் மூலம் பல ஆண்டுகளாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலேயே இருந்தார்.
மாற்றம்..
இந்நிலையில் பில் கேட்ஸ் தனது சுயமுடிவின் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறி தொண்டு நிறுவனத்தைத் தனது மனைவியுடன் இணைந்து துவங்கினார்.
இந்தத் தொண்டு நிறுவனத்தில் தனது அதிகப்படியான சொத்துக்களை நன்கொடையாகக் கொடுத்த காரணத்தால் இவரது சொத்து மதிப்பில் தொடர்ந்து சரிவுகள் ஏற்பட்டது.
மைக்ரோசாப்ட்
ஆனாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெரும் அளவிலான பங்குகள் பில் கேட்ஸிடம் இருந்த காரணத்தால் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்பும் முதல் இடத்திலேயே ராஜாவாகத் திகழ்ந்தார்.
போட்டி
இந்நிலையில் வர்த்தகச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் போட்டியாகக் குறுகிய காலகட்டத்தில் பல நிறுவனங்கள் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்த காரணத்தால் பில் கேட்ஸ் சொத்து மதிப்பிற்கும் பிற முன்னணி பணக்காரர்களுடைய சொத்து மதிப்பிற்குமான வித்தியாசம் குறையத் துவங்கியது.
முதல் இடத்தை இழந்தார்
கடந்த சில வருடங்களாகவே அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பீசோஸ், பில் கேட்ஸ் உடன் போட்டி போட்டு வந்த நிலையில் பில்கேட்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
உலகின் டாப் 10 பணக்காரர்கள்
2018ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்காரர்கள் பட்டியலைச் சீனாவின் ஹூரன் வெளியிட்டுள்ள நிலையில் இதில் பில்கேட்ஸ் அவர்களுக்குக் கிடைத்துள்ள இடத்தைப் பாருங்கள்.
முதல் இடம்
பெயர்: ஜெப் பீசோஸ்
சொத்து மதிப்பு: 123 பில்லியன் டாலர்
வருடாந்திர வளர்ச்சி: 71 சதவீதம்
நிறுவனம்: அமேசான்
வயது: 54
சொந்த நாடு: அமெரிக்கா
2வது இடம்
பெயர்: வாரன் பபெட்
சொத்து மதிப்பு: 102 பில்லியன் டாலர்
வருடாந்திர வளர்ச்சி: 31 சதவீதம்
நிறுவனம்: பெர்க்ஷைர் ஹேத்தவே
வயது: 87
சொந்த நாடு: அமெரிக்கா
3வது இடம்
பெயர்: பில் கேட்ஸ்
சொத்து மதிப்பு: 90 பில்லியன் டாலர்
வருடாந்திர வளர்ச்சி: 11 சதவீதம்
நிறுவனம்: மைக்ரோசாப்ட்
வயது: 62
சொந்த நாடு: அமெரிக்கா
4வது இடம்
பெயர்: மார்க் ஜூக்கர்பெர்க்
சொத்து மதிப்பு: 79 பில்லியன் டாலர்
வருடாந்திர வளர்ச்சி: 36 சதவீதம்
நிறுவனம்: பேஸ்புக்
வயது: 33
சொந்த நாடு: அமெரிக்கா
5வது இடம்
பெயர்: பெர்னார்டு அர்னால்ட்
சொத்து மதிப்பு: 78 பில்லியன் டாலர்
வருடாந்திர வளர்ச்சி: 105 சதவீதம்
நிறுவனம்: LVMH (லூயிஸ் வில்டான்)
வயது: 68
சொந்த நாடு: பிரான்ஸ்
6வது இடம்
பெயர்: அமான்சியோ ஆர்டிகோ
சொத்து மதிப்பு: 73 பில்லியன் டாலர்
வருடாந்திர வளர்ச்சி: 6 சதவீதம்
நிறுவனம்: இன்டிடெக்ஸ்
வயது: 81
சொந்த நாடு: ஸ்பெயின்
7வது இடம்
பெயர்: கார்லோஸ் ஸ்லிம்
சொத்து மதிப்பு: 67 பில்லியன் டாலர்
வருடாந்திர வளர்ச்சி: 46 சதவீதம்
நிறுவனம்: அமெரிக்கன் மோவில்
வயது: 78
சொந்த நாடு: மெக்சிகோ
8வது இடம்
பெயர்: லேரி எலிசன்
சொத்து மதிப்பு: 54 பில்லியன் டாலர்
வருடாந்திர வளர்ச்சி: 13 சதவீதம்
நிறுவனம்: ஆரக்கிள்
வயது: 73
சொந்த நாடு: அமெரிக்கா
9வது இடம்
பெயர்: லேரி பேஜ்
சொத்து மதிப்பு: 50 பில்லியன் டாலர்
வருடாந்திர வளர்ச்சி: 35 சதவீதம்
நிறுவனம்: கூகிள்
வயது: 44
சொந்த நாடு: அமெரிக்கா
10வது இடம்
பெயர்: மைக்கெல் ப்ளூம்பெர்க்
சொத்து மதிப்பு: 49 பில்லியன் டாலர்
வருடாந்திர வளர்ச்சி: 17 சதவீதம்
நிறுவனம்: ப்ளூம்பெர்க்
வயது: 76
சொந்த நாடு: அமெரிக்கா
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications