இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமாகத் திகழும் அதானி குழுமத்தின் தலைவராக இருக்கும் கெளதம் அதானி, பிரதமர் மோடிக்கு நெருங்கிய நண்பர் என்பதும் நாம் அனைவருக்கும் தெரியும்.
ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பால் நாட்டின் வர்த்தகச் சந்தை முழுவதுமாகச் சீர்குலைந்து இருக்கும் காலகட்டத்திலும் கெளதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது.
ஹூரன் ரிச் லிஸ்ட் 2018
சீன பத்திரிக்கை நிறுவனமான ஹூரன் ஒவ்வொரு ஆண்டும் உலகின் முன்னணி பணக்காரர்களின் வர்த்தகம், வளர்ச்சி, சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனித்து ஹூரன் ரிச் லிஸ்ட் என்னும் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
2018ஆம் ஆண்டுக்கான பட்டியலில் ஆச்சரியம்படும் அளவிற்குக் கெளதம் அதானி தனது சொத்து மதிப்பில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளார்.
தோல்வி
ஆஸ்திரேலியாவில் நிலக்கரி உற்பத்தி மற்றும் வர்த்தகத் திட்டத்தில், அந்நாட்டு மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் காக்கும் அமைப்புகள் அதிகளவிலான எதிர்ப்புகளைத் தெரிவித்த காரணத்தால் அந்நாட்டு அரசு இத்திட்டத்தைக் கைவிட முடிவு செய்தது.
இதனால் மிகப்பெரிய தோல்வியை ஆதானி குழுமம் 2017இல் சந்தித்தார்.
இந்தியா
2016ஆம் ஆண்டு அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தடையின் தாக்கத்தில் இருந்து முழுமையாக வெளியே வராத நிலையில், இந்த நடவடிக்கையின் தோல்வியை மறைக்க அவசர அவசரமாக ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு நாட்டின் மொத்த வர்த்தகச் சந்தையையும் சீர்குலைத்தது.
கெளதம் அதானி
இத்தகைய மோசமான சூழ்நிலையிலும் பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரான கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 2017ஆம் ஆண்டில் சுமார் 109 சதவீதம் வரையில் உயர்ந்து சுமார் 14 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களைச் சேர்த்துள்ளார்.
19 பேர்
2018ஆம் பட்டியல் 2017ஆம் ஆண்டில் முடிவுகள் வைத்துத் தயாரிக்கப்படும். இந்நிலையில் ஹூரன் ரிச் லிஸ்ட்-இல் டாப் 100 பேர் பட்டியலில் புதிதாக நுழைந்த 19 பேரில் கெளதம் அதானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த 19பேரில் கெளதம் அதானி மட்டுமே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
98வது இடம்
ஹூரன் ரிச் லிஸ்ட்-இல் டாப் 100 பேர் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி 98வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications