சீனாவின் முன்னணி பத்திரிக்கையாகத் திகழும் ஹூரன் 2018ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
போர்ப்ஸ், ப்ளூம்பெர்க் நிறுவனங்களுக்கு இணையாக ஹூரன் நிறுவனம் பல்வேறு வர்த்தகக் காரணிகளைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இப்பட்டியல் இந்தியாவையும், இந்திய பணக்காரர்களைப் பற்றியும் என்ன சொல்லியுள்ளது தெரியுமா..?
3வது இடத்தில் இந்தியா
ஒவ்வொரு வருடம் வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ப பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துகொண்ட இருக்கும், அதேபோலப் புதிய பணக்காரர்களும் உருவாக்கிக்கொண்ட இருப்பார்கள்.
இப்படி ஹூரன் வெளியிட்ட 2018ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சுமார் 31 இந்தியர்கள் புதிய பணக்காரர்களாக உருவாகியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் புதிய பணக்காரர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
69 நாடுகள்
ஹூரன் பணக்காரர்கள் 2018 பட்டியலில் சுமார் 69 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,694 பில்லியனர்கள் உள்ளனர். இதில் 437 பேர் முதல் முறையாக இப்பட்டியலில் இணைந்தவர்கள்.
மொத்த மதிப்பு
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 2,694 பேரின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 31 சதவீதம் வரையில் உயர்ந்து 10.5 டிரில்லியன் டாலராக உள்ளது. இது உலகின் ஜிடிபி அளவில் 13.2 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
3வது இடத்தில் இந்தியா
2018 பட்டியலில் சீனா புதிதாக 210 பில்லியனர்களைப் புதிதாகச் சேர்த்து மொத்த 819 பில்லயனர்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அதிகப் பில்லியனர்கள் வைத்துள்ளது.
மாற்றம்
2,694 பேர் இருக்கும் இந்தப் பட்டியலில் 1,508 பேருடைய சொத்து மதிப்பு கடந்த வருடம் உயர்ந்துள்ளது, 567 பேர் புதிதாக இணைந்துள்ளனர். 363 பேர் சொத்து மதிப்பில் சரிவை சந்தித்துள்ளனர்.
உயர் மட்டத்தில் மாற்றம்
டாப் 3 இடங்களில் இந்த வருடம் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பீசோஸ் சொத்து மதிப்பு 2017இல் மட்டும் 51 டாலர் உயர்ந்து 123 பில்லியன் டாலர் என்ற அளவை அடைந்து உலகின் முதன்மையான பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.
பல வருடமாக முதல் இடத்தில் இருந்த பில் கேட்ஸ் பீசோஸ்-இன் வளர்ச்சியால் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
அதேபோல் வார்ன் பட்பெட் அவர்களின் சொத்து மதிப்பும் 31 சதவீதம் வரையில் வளர்ந்து 100 பில்லியன் டாலரை தொட்டுப் பில்கேட்ஸ் அவர்களை 3வது இடத்திற்குத் தள்ளியுள்ளார்.
முக்கியத் துறை
2017ஆம் ஆண்டில் தொழில்நுட்ப துறை பணம் சம்பாதிக்க முதன்மை துறையாக விளங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட், உற்பத்தி, முதலீடு ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
வேகமான வளர்ச்சி
2017ஆம் ஆண்டில் உலகளவில் செய்யப்பட்ட ஆய்வில் உற்பத்தி மற்றும் உணவு & குளிர்பான துறையின் வளர்த்தி மிகவும் வேகமானதாக இருந்துள்ளது.
பெண்கள்
2,694 பேர் கொண்ட இப்பட்டியலில் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் 15 சதவீதம் பேர் பெண்கள். கடந்த வருடம் 152 ஆக இருந்த இதன் எண்ணிக்கை இந்தப் பட்டியலில் 184 ஆக உயர்ந்துள்ளது.
ரீயல் எஸ்டேட் ஆதிக்கம்
டாப் 100 பேர் கொண்ட பட்டியலில் புதிதாக 19பேர் இணைந்துள்ளனர். இதில் அதிகம் சீன ரீயல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள் தான்.
இந்த 19பேரில் ஒரேயொரு இந்தியர் மட்டும் உள்ளார்.
170 இந்தியர்கள்
இப்பட்டியலில் சுமார் 170 பேர் இந்தியர்கள், இதில் 31 பேர் இந்தியாவை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருபவர்கள்.
இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள 170பேரில் பார்மா துறையில் 19 பில்லியனர்களும், ஆட்டோமொபைல் மற்றும் உதிரிப் பாகங்கள் துறையில் 14பேரும், நுகர்வோர் பொருட்கள் துறையில் 11 பேரும் பில்லியனர்களாக உள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்கள்
இந்தியாவை விட்டு வெளியேறிய 31 பேரில் அதிகமானோர் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications