பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சக குழு மார்ச் 1ம் தேதி கடன் வாங்கிவிட்டு ஏமாற்றியவர்களுக்கு எதிராகத் தப்பியோடும் பொருளாதாரக் குற்றவாளிகள் 2018 மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் பெற்றுவிட்டு நீரவ் மோடி, மேஹூல் சோக்ஸி மற்றும் விஜய் மல்லையா உள்ளிட்டவர்கள் ஏமாற்றியுள்ளதால் மோடி தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

தப்பியோடும் பொருளாதாரக் குற்றவாளிகள் 2018 மசோதா கீழ் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்று ஏமாற்றியவர்களின் சொத்துக்கள் போன்றவற்றைப் பரிமுதல் செய்தல் பொருளாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படாமல் காக்க முடியும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2017-18 வரவு செலவு திட்டத்தில், நிதி தவறிழைப்பவர்களைச் சமாளிப்பதற்குச் சட்டப்பூர்வ மாற்றங்களை அறிமுகப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பண மோசடி சட்டம் 2002-ன் கீழ் பிரத்தியேக பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசேச நீதிமன்றம் ஏற்பாடு செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications