நான் இந்தியா வர தாயார்.. அதற்கு இந்திய அரசு இதைச் செய்யுமா? மேஹூல் சோக்‌ஸி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 12,700 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நீரவ் மோடியின் மாமாவும் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் தான் இந்தியா திரும்பி உங்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்கத் தாயார் என்றும் அதற்கு நீங்கள் எனது பாஸ்போர்டிற்கு விதித்துள்ள தடையினை நீக்குங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

 

இந்தத் தகவலானது பண மோசடி சட்டத்தின் கீழ் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர்களை விசாரித்து வரும் அமலாக்கத் துறை ஊழியர்களிடம் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பெற்றதில் தெரிய வந்துள்ளது.

வாதம்

வாதம்

மோஹூல் சோக்ஸி குறித்து நீதிமன்றத்தில் வாதாடிய வெங்கோக்கார் முழுமையாகப் பாஸ்போர்ட்டுக்கு விதித்துள்ள தடையினை நீக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தற்காலிக பயண அனுமதியை மடுமாவது அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

சம்மன்

சம்மன்

மோசடி வழக்கில் மோஹூல் சோக்ஸி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 சம்மன் அனுப்பப்பட்டுள்ளது நிலையில் இவர் ஒன்றுக்குக் கூடத் தற்போது வரை ஆஜர் ஆகவில்லை என்பதால் நீதிமன்றம் இவரின் பயண அனுமதிக்கு உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிமுதல்

பரிமுதல்

அமலாக்கத் துறை இது வரை மோஹூல் சோக்ஸிக்கு சொந்தமான 41 அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது. நீரவ் மோடியுடன் இவருக்குத் தொடர்புடையதால் தான் சொத்துக்கள் பரிமுதல் செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர்.

 பினாமி சொத்துக்கள்
 

பினாமி சொத்துக்கள்

மத்திய அரசு ஒரு பக்கம் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளவர்களின் பினிமியாகக் கருதப்படுவார்களின் சொத்துக்களையும் பரிமுதல் செய்யக்கூடிய ஒரு சட்டத்தினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தச் சட்டம் விரைவில் அமலுக்குக் கொண்டு வரப்படும் என்றும் அதற்கு இந்தியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியும் அனைத்து வங்கி நிறுவனங்களிடமும் பாதுகாப்பினை அதிகரிக்குமாறும் ஆடிட்டிங் செய்து அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. மறுபக்கம் தினமும் புதிது புதிதாக மோசடிகள் குறித்து வெளிவந்து கொண்டு இருப்பதைப் பார்த்து மக்கள் தங்களது பணத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்ற அஞ்சத்துவங்கியுள்ளனர்.

வங்கி நிறுவனங்கள்

வங்கி நிறுவனங்கள்

இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்டிஎப்சி உள்ளிட்டவை அளித்துள்ள வீட்டுக் கடன் போன்றவற்றின் வட்டி விகிதங்களை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளதும் மோசடி செய்ததற்கு மக்கள் அவதிப்பட வேண்டுமா என்று சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Revoke passport cancellation and I'll return: Mehul Choksi to Indian govt

Revoke passport cancellation and I'll return: Mehul Choksi to Indian govt
Story first published: Saturday, March 3, 2018, 13:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X