ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட்டினை டெபிட் கார்டு மூலகமாக முன் பதிவு செய்யும் போது விதித்து வரும் வணிகர் தள்ளுபடி விகித கட்டணத்தினை நீக்கியுள்ளது. ஆனால் இந்த வரம்பானது அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரையிலான டிக்கெட்களைப் புக் செய்யும் போது மட்டுமே ஆகும்.
பணமில்லா பரிவர்த்தனை
நிதி சேவைகள் துறை, நிதி அமைச்சகம் இரண்டும் 2018 பிப்ரவரி மாதம் டிஜிட்டல் மற்றும் கேஷ் லஸ் பரிவர்த்தனையினை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளுக்குச் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.
பணம்
ரயில் டிக்கெட் விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட பணம், ரயில்வே அமைச்சகம் மூலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பரிவர்த்தனைகள் அரசாங்க ரசீதுகளாகக் கருதப்பட வேண்டும் என்றும் கூறினார்.
MDR கட்டணங்கள்
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் நன்மை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் MDR கட்டணங்கள் செலுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர்.
பிராந்திய மொழிகளில் ரயில்வே டிக்கெட்
மறுபக்கம் தமிழக ரயில்வே நலச் சங்கம் வலியுறுத்திய பிராந்திய மொழிகளில் ரயில்வே டிக்கெட் என்ற முறையினை முன்பதிவு இல்லா ரயில்களுக்குப் பெறலாம் என்று அறிவித்துள்ளனர். முதன் முறையாக இந்தப் பிராந்திய மொழி டிக்கட்டானது கர்நாடகாவின் மைசூர், பெங்களூரு மற்றும் ஹூப்ளி ஆகிய இடங்களில் இருந்து சோதனை முயற்சி செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications