பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12,600 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டு வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடி எந்த நாட்டில் மறைந்துள்ளார் எனத் தெளிவான தகவல்களைக் கிடைக்காத நிலையில், அமெரிக்காவும் அவரைக் கண்டுப்பிடக்க உதவ முடியாது என்ற வகையில் பதில் அளித்தது.
இந்நிலையில் நீரவ் மோடி அமெரிக்காவில் தான் இருக்கிறார் என நம்பப்பட்ட நிலையில், புதிய திருப்பமாக ஹாங்காங்-இல் அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
வழக்கும் உத்தரவும்..
இந்த மோசடி வெளியான பின்பு வெளிநாட்டின் மறைந்திருக்கும் நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹூல் சோக்ஸி ஆகியாரை இந்தியாவிற்குக் கொண்டு வரும் நோக்கில் அமலாக்கத் துறை, பணச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுமட்டு் அல்லாமல் சனிக்கிழமை நீரவ் மோடி மீது ஜாமீனில் வெளிவராத வகையில் கைது ஆணையை வழங்கியுள்ளது.
சமன்
சிபிஐ அமைப்பு நீரவ் மோடிக்கு அளித்த பல சமன்களுக்கு இதுவரை சரியாகப் பதில் அளிக்காத நிலையில் சிறப்பு விசாரணைக் குழு ஜாமீனில் வெளிவராத வகையில் கைது ஆணையைக் கோரியுள்ளது.
பிஸி
சமீபத்தில் சிபிஐ அமைப்பு நீரவ் மோடிக்கு அளித்த சமனில் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்த நிலையில், தனது வேலை இருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலைக்குத் தான் வர முடியாது எனவும் அவர் பதில் அளித்துள்ளார்.
இந்தியா
ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை மூலம் அமலாக்கத் துறை நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோரை இந்தியாவிற்கு அழைத்து வர வாய்ப்பு அதிகரிக்கும் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
ஹாங்காங்
தற்போது நீரவ் மோடி ஹாங்காங்-இல் இருப்பது தெரியவந்துள்ள நிலையில் அந்நாட்டு அரசுடனோ அல்லது நேரடியாகக் கைது செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications