இன்றளவில் திறமை இருந்தால் போதும் எந்தொரு தொழில் செய்தும் வெற்றிபெற முடியும் என்பதும் பல முறை நிரூபணம் ஆகிவரும் இந்தத் தருணத்தில் மோடி அரசியல் பணிக்கு முன்பு டீ விற்றவர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
இங்கு ஒருவர் மோடியைப் போல் டீ விற்று மாதம் 12 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதித்து வருகிறார்.
புனே..
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் யூவ்லி டீ ஹவ்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவ்நாத் யூவ்லி மாதம் 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இப்பிரிவில் இருக்கும் பிற டீ கடைக்காரர்களுக்குப் புதிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளார் நவ்நாத்.
இண்டர்நேஷனல் பிராண்டு
இதுகுறித்து நவ்நாத் யூவ்லி கூறுகையில் எங்களது பிராண்டு இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு விரைவில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பக்கோடா
மேலும் பக்கோடா போல டீ விற்பனை செய்வதன் மூலம் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பது மட்டுமல்லாமல். இது வேகமாக வளரும் ஒரு வர்த்தகம் என்று ANI செய்தியாளர்களிடம் கூறினார் நவ்நாத்.
3 கிளைகள்
தற்போது யூவ்லி டீ ஹவ்ஸ் சுமார் 3 கிளைகளை இதே பகுதியில் வைத்துள்ளது மட்டும் அல்லாமல் 12 பேர் மட்டுமே பணியில் அமர்த்தி மாதத்திற்குச் சுமார் 12 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதித்து வருகிறார் நாவ்நாத்.
எதிர்காலத்தில் 100 கிளைகளை வரை திறக்க உள்ளதாகவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
ஐடியா
2011ஆம் ஆண்டில் உருவான இந்த ஐடியாவை மையமாக வைத்து சற்று பெரிய அளவிலும், டீ-க்காகப் பிரத்தியேக பிராணட் உருவாக்கும் முயற்சியில் உருவாகியது யூவ்லி டீ ஹவ்ஸ்.
சுமார் 4 வருடம் டீ சுவை மற்றும் அதன் வர்த்தகத்தை ஆய்வு செய்த பின்னர், தொடர்ச்சியாக விரிவாக்கப் பணிகளைச் செய்துள்ளனர்.
தினமும்...
டீ-யின் சுவை மக்களுக்கு அதிகம் பிடித்துள்ள காரணத்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தற்போது தினமும் சுமார் 3,000 முதல் 4,000 கப் டீ-களை விற்பனை ஆகி வருகிறது.
வீடியோ
மோடி செய்த அதே வேலை தான்.. ஆனா மாதம் ரூ.12 லட்சம் வருமானம்..!
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications