இந்தியாவில் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக வருமான வரித்துறை தொடர்ந்து பல்வேறு சோதனைகளையும் ஆய்வுகளை நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக நிறுவனங்கள் மையமாக வைத்து நடத்திய சோதனையில் சுமார் 3,200 கோடி ரூபாய் அளவிலான மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
447 நிறுவனங்கள்
ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படும் வரி பணத்தை நிறுவனங்கள் அரசிடம் அளிக்காமல் தனது பிற வர்த்தகத்தில் முதலீடு செய்து வருவதை வருமான வரி கண்டுப்பிடித்துள்ளது.
சுமார் 447 நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பள பணத்தை இப்படி மோசடி செய்துள்ளதை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை
இந்திய வருமான வரித்துறையின் TDS பிரிவு இந்த நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தி எச்சரிக்கை விடுத்ததுள்ளதாக, கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் இப்பரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்டனை
இத்தகைய மோசடிக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 3 மாதம் முதல் அதிகப்படியாக 7 வருடங்கள் வரையில் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டலாம். மேலும் இந்த நிறுவனங்கள் மீது பிரிவு 276பி கீழ் விசாரணை மேற்கொள்ள பட உள்ளது.
முக்கிய துறை நிறுவனங்கள்
இந்த 447 நிறுவனங்களில் பிரபலமான ஒரு ஐடி சேவை நிறுவனம் சுமார் 11 கோடி ரூபாய் அளவிலான மோசடியை செய்துள்ளது. இதை தொடர்ந்து இன்பராஸ்டக்சர் நிறுவனம் 14 கோடியும், ஒரு கட்டுமான நிறுவனம் சுமார் 100 கோடி ரூபாய் அளவிலும் ஊழியர்கள் பணத்தை மோசடி செய்துள்ளது.
ஒரு வருடம்
வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில் ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான காலத்தில் சுமார் 447 நிறுவனங்கள் அல்லது வழக்குகள் சுமார் 3,200 கோடி ரூபாய் அளவிலான மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளவர்களில் சில கைது செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை
இப்படி 447 நிறுவனங்கள் மோசடி செய்த பணத்தை, நிறுவனத்தின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் ஆகியவற்றை கைப்பற்றி அதன் மூலம் ஈடு செய்ய திட்டமிட்டுள்ளது வருமான வரி துறை.
மன்னிப்பு
சில நிறுவனங்கள் வருமான வரித்துறையிடம் மன்னிப்பு கேட்டுள்ளது, அதோடு ஊழியர்களிடம் பெறப்பட்ட பணத்தை முறையாக அரசுக்கு செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியா
மாதம் ரூ.12 லட்சம் வருமானம்..!
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications