நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின், சென்னை வேளச்சேரி கிளையில் கார் வாங்குவதற்காகச் சுமார் 3.3 கோடி ரூபாய் கடனை 13 பேர் பெற்றுள்ளது.
இந்தப் பணத்தை வைத்துக் கார் வாங்காமல் அருவா சண்ட என்னும் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் மார்ச் 16ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்தத் திரைப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகன கடன்
அருவா சண்ட படத்தின் ஹீரோ மற்றும் கபடி வீரர் ராஜா உட்படச் சுமார் 13 பேர், வேளச்சேரி வங்கி கிளையின் வாகன கடன் ஆலோசகரான சித்ரா தலைமையில் தேவையான ஆவணங்கள், KYC படிவம் ஆகியவற்றைக் கொடுத்து சுமார் 3.30 கோடி ரூபாய் அளவிலான கடனுக்கு ஒப்புதல் பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆவணங்கள்
இந்த வங்கி கிளையில் சித்ராவிற்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைத் தாண்டி, சில போலி மற்றும் சந்தேகத்திற்குரிய ஆவணங்களைக் கொடுத்து கடனுக்கு ஒப்புதல் பெற்றுள்ளார்.
வங்கி பணப் பரிமாற்றம்..
சித்ரா அவர்களுக்கு இந்த வங்கி கிளையில் நல்ல மதிப்பு இருக்கும் காரணத்தால் பல வங்கி அதிகாரிகளின் கம்பியூட்டர்களையும் பயன்படுத்த உரிமை கொண்டு உள்ளார்.
இத்தகைய சூழ்நிலையை லாபகமாகப் பயன்படுத்திய சித்ரா, வங்கி அதிகாரிகளின் யுசர் நேம் மற்றும் பாஸ்வோர்டு உடன் 13 பேருக்கு ஒப்புதல் பெற்ற கடன் தொகையை நேரடியாக அவர்களின் தனிப்பட்ட கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
முறைகேடு
இந்நிலையில் வேளச்சேரி வங்கி கிளையின் மேலாளர் கடன் ஒப்புதலில் முறைகேடுகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். சந்தேகத்திற்கிடமான கடன்கள் அனைத்தும் சித்ரா மூலம் ஒப்புதல் பெற்றுள்ளார்.
தற்போது அவர் செய்த அனைத்துக் குற்றங்களும் நிருபணமாகியுள்ளது.
பணம்
இப்படி வாகன கடன் தொகையை நேரடியாகப் பணமாகப் பெற்ற 13 பேர், கார் வாங்காமல் அருவா சண்ட திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
வழக்கு
சித்ரா மீதான குற்றத்தை விசாரிக்கும் போது இந்த 13 பேர் செய்த மோசடி வெளியாகி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
தடை
சென்னை உயர் நீதிமன்றத்தில் வங்கி கொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வெயிட் ஸ்கிரீன் புரொடெக்ஷன்ஸ் தயாரித்த அருவா சண்ட திரைப்படத்தை, இந்நிறுவன தலைவர் ராஜா வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications