மத்திய அரசின் அதிகச் செலவுகளின் வாயிலாக டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் உற்பத்தித் துறை சிறப்பான வளர்ச்சியை அடைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 72 சதவீதம் வரையில் உயர்ந்தது.
இதுமட்டும் அல்லாமல் உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகள் பட்டியலில் சீனாவிடம் இழந்த முதல் இடத்தை மீண்டும் இந்தியா பெற்றுள்ளது.
ஆனால் பிப்ரவரி மாதம் சேவைத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சேவைத்துறை
நவம்பர் மாதத்திற்குப் பின்பு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்த சேவைத்துறை பிப்ரவரி மாதம் சரிவை சந்தித்துள்ளது. இக்காலகட்டத்தில் சேவைத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைந்த அளவிலான ஆர்டர்களை மட்டுமே பெற்று வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவிலான தொய்வை அடைந்துள்ளது.
என்ன காரணம்
சேவைத்துறையில் பல்வேறு காரணங்களுக்காக விலை போட்டிகள் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாத நிறுவனங்களுக்குக் குறைந்த அளவிலான ஆர்டர்கள் மட்டுமே கிடைத்து வருகிறது.
புள்ளிவிபரம்
இந்நிலையில் நிக்கி இந்தியா-வின் சேவைத்துறையின் வர்த்தகக் குறியீடு ஜனவரி மாதத்தில் 51.7 ஆகவும், பிப்ரவரி மாதத்தில் 47.8 ஆகவும் இருக்கிறது.
பிப்ரவரி மாத அளவீடு ஆகஸ்ட் மாதத்தை விடவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக
பிப்ரவரி மாதம் சேவைத்துறையில் வர்த்தகம் மற்றும் புதிய ஆர்டர்கள் என இரண்டுமே குறைந்துள்ளது. இது 2017 நவம்பர் மாதத்திற்குப் பின் ஏற்பட்டுள்ள மோசமான நிலையாகும்.
இதுமட்டும் அல்லாமல் இத்துறையின் வளர்ச்சி தற்போது சரிவு பாதையில் உள்ளது என்பதை நிக்கி இந்தியா குறியீடு காட்டுகிறது.


Click it and Unblock the Notifications