மத்திய நிதி அமைச்சகம் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட்டில் 27 சதவீதம் வரை குறைத்துள்ளதாகவும் இது குறித்துக் கவனத்தினை நிதி அமைச்சகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் இதனை வைத்துத் தான் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும் ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயலிடம் ரயில்வே துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரயில்வேக்கான நிதியைக் குறைத்ததால் எந்தத் திட்டங்கள் எல்லாம் பாதிப்படைந்துள்ளன என்ற அறிக்கையினைச் சமர்ப்பிக்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பட்ஜெட் நிதி
இந்திய ரயில்வே நிர்வாகம் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதிகளை வைத்துத் தான் பல முதலீடுகளைச் செய்து வருகிறது என்றும் தற்போது நிதிகள் குறைக்கப்பட்டு வரும் நிலையில் புதிய திட்டங்கள் பல வகையில் பாதிப்படையும் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேவை எவ்வளவு
2017-2018 நிதி ஆண்டுக்கு 55,000 கோடி ரூபாய்த் தேவைப்படும் என்று ரயில்வே துறை எதிர்பார்த்த நிலையில் அது 40,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2018-2019 நிதி ஆண்டில் 53,060 கோடி ரூபாய்த் தேவைப்படும் என்றும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் புதிய திட்டங்கள்
சில சேவைகள் கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு மூலமாகச் சரி செய்யப்பட்டாலும் மொத்த நிதிநிலையில் செய்து வரும் நிதி குறைப்பால் புதிய ரயில் வழித்தடங்கள் போன்றவை பாதிப்படைந்து வருத்தாகக் கூறுகின்றனர். அது மட்டும் இல்லாமல் ரயில் பாதை மாற்றங்கள், போக்குவரத்து தொடர்பான வேலைகள், பட்டறைகள், ரயில் டிராப்பிக் உள்ளிட்டவைக்கான பட்ஜெட் பாதிப்படைந்துள்ளது.
பாதிப்பில்லை
ரயில்வே துறைக்கு மொத்த பட்ஜெட்டில் நிதி குறைக்கப்படுவதால் பெரியதாகப் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் அதிலும் ரயில்வேக்குப் பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது கண்டிப்பாகத் தேவையா என்ற கேள்வியும் எழுப்ப வேண்டும் என்று ரயில்வே போர்டின் முன்னால் நிதி ஆணையர் கூறியுள்ளார்.
லாபமா? சேவையா?
சமுகப் பொருளாதாரத்தினைக் கருத்தில் கொண்டு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ரயில் பயணிகளுக்கு அளிக்கப்படும் மானியத்தால் மட்டும் 30,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ரயில்வே லாபத்திற்காக இயங்க வேண்டுமா அல்லது சமுகப் பொருளாதாரத்தினைக் கருத்தில் கொண்டு இயங்க வேண்டுமா என்று அரசு முடிவு செய்ய வேண்டும் அதிகாரிகள் கேட்டு வருகின்றனர்.
பொதுப் பட்ஜெட்
சென்ற ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் பொதுப் பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட நிலையில் ரயில்வே நிர்வாகம் டிவிடண்ட்களைச் செலுத்துவதில்லை. இது மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் பொதுவாக 6.5 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். தற்போது எளிமையான சில கடன் திட்டங்கள் மூலம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் முன்பு பத்திரங்கள் அடைமானம் வைத்து கடன் பெற்று நிதி ஒதுக்கப்பட்டு வந்துள்ளது.
ஒதுக்கீட்டைக் குறைக்க முடியாது
ரயில்வே அதிகாரிகள் ஏற்கனவே மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதனைக் குறைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். அதாவது 40,000 கோடி ரூபாய் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடாகவும் 3,000 கோடி ரூபாய் மேற்கு அர்ப்பணிப்பு சரக்கு பாதைக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையிலிருந்து வழங்கப்படும் என்றும் அதில் ஏற்கனவே 2,000 கோடி ரூபாய் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications