இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் நிறுவனமாகத் திகழும் பேடிஎம், புதிதாகத் துவங்கியுள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளமான பேடிஎம் மால் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காகவும், புதிய சேவைகள் அறிமுகத்திற்காகவும் சுமார் 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்யச் சீனா, ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகிறது.
அலிபாபா
சீன ஈகாமர்ஸ் சந்தையின் முடிசூடா மன்னாக விளங்கும் அலிபாபா மற்றும் அதன் பேமென்ட் சேவை நிறுவனமான ஆன்ட் பைனான்சியல் நிறுவனங்கள் பேடிஎம் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்து. இந்நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அலிபாபா கையில் இருக்கும் பங்கின் மதிப்பு மட்டும் சுமார் 13,000 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
சாப்ட்பேங்க்
இந்நிலையில் ஜப்பான் நாட்டின் முன்னணி முதலீட்டு மற்றும் டெலிகாம் சேவை நிறுவனமான சாப்ட்பேங்க் தற்போது பேடிஎம் நிறுவனத்தில் சுமார் 3000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது,
இதன் மூலம் பேடிஎம் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1000 கோடி ரூபாய்
இதோடு பேடிஎம், சிங்கப்பூர் தேமாஸ்க் ஹோல்டிங்க்ஸ் மற்றும் சீனாழின் பிரிமாவெரா கேப்பிடல் குரூப் ஆகிய நிறுவனங்களிடம் கூடுதலாக 1,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
போட்டி
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சேவை சந்தையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான ஆர்வத்தைக் காட்டி வருகிறது.
ஈகாமர்ஸ் நிறுவனங்கள்
சமீபத்தில் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் புதிய முதலீட்டை ஈர்த்தது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது பேடிஎம் சுமார் 4,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க முடிவு செய்துள்ளது.
3வது நிறுவனம்
பேடிஎம் நிறுவனத்தில் சாப்ட்பேங்க்-இன் 3000 கோடி ரூபாய் முதலீடு இந்த மாதத்தின் இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஆன்லைன் சந்தையில் மட்டும் சாப்ட்பேங்க் சுமார் 3 நிறுவனங்களில் இதுவரை முதலீடு செய்துள்ளது. 2014இல் ஸ்னாப்டீல், 2017இல் பிளிப்கார்ட், தற்போது பேடிஎம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications