இந்திய தனிநபர் அடையாள ஆணையம் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிவதற்கான சேவையினை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் மொபைல் எண் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எளிதாகத் தங்களது ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து இணைப்பைச் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதனால் இந்த உத்தரவு?
டெலிகாம் நிறுவனங்களின் சில ரீடெய்ல் கடைகள் மற்றும் ஏஜெண்ட்கள் ஆதார் எண்ணைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் புதிய சிம் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் ஆக்டிவேட் செய்கிறார்கள் என்ற தகவல் வந்ததை எடுத்து ஆதார் ஆணையம் மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிய சேவை வழங்க உத்தரவிட்டுள்ளது.
கண்காணிப்பு
டெலிகாம் நிறுவனங்களை ரீடெய்ல் கடைகள் மற்றும் ஏஜெண்ட்கள் தவறாக ஆதார் சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்திகிறார்களா என்று கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 15
மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிவதற்கான சேவையானது 2018 மார்ச் 15-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார்
நாடு முழுவதில் இருந்தும் 1.2 பில்லியன் மக்கள் தங்களது பையோமெட்ரிக் விவரங்களை அளித்து 12 இலக்க அதார் எண்ணைப் பெற்றுள்ளனர். அதார் கார்டு தற்போது பல அரசு சேவைகள் மற்றும் அரசு சாரா சேவைகளுக்கும் அடையாள மற்றும் முகவரி ஆவணமாகப் பெறப்பட்டு வருகிறது.
கருப்புப் பணம்
கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கப் பான் எண் மற்றும் வங்கி கணக்கிலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications