ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் அதிரடி விற்பனையாக உள்நாட்டு விமானப் பயணங்களை 799 ரூபாய் முதலும், வெளிநாட்டு விமானப் பயணங்களை 999 ரூபாய் முதலும் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
சலுகை விலை டிக்கெட்கள் 2018 செப்டம்பர் 3 முதல் 2019 மே 28 வரையிலான பயணங்களுக்கு 2018 மார்ச் 11 தேதிக்குள் புக் செய்து பெறலாம் என்று ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு விமானப் பயணங்கள்
ஏர் ஏசியாவின் 799 ரூபாய் ஆஃபரில் புவனேஷ்வர் - கொல்கத்தா, புவனேஷ்வர் - ராஞ்சி, ராஞ்சி - கொல்கத்தா, கொச்சி - பெங்களூரு, ராஞ்சி - பெங்களூரு, கவுகாத்தி - இம்பால், பகோத்ரா - கொல்கத்தா, இம்பால் - கவுகாத்தி, சென்னை - பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் சலுகைகளைப் பெறலாம்.
வெளிநாட்டு வழித்தடங்கள்
ஏர் ஏசியாவின் 999 ரூபாய் சலுகை விலையில் புவனேஷ்வர் - கோலாலம்பூர், கொச்சி - கோலாலம்பூர், சென்னை - கோலாலம்பூர், விஷாகபட்டினம் - கோலாலம்பூர் மற்றும் ஜெய்ப்பூர் - கோலாலம்பூர் ஆகிய வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
பிற முக்கிய விதிகள்
www.airasia.com என்ற இணையதளம் மூலமாக மட்டுமே சலுகை விலை டிக்கெட்களைப் புக் செய்ய முடியும். டிக்கெட் கட்டணத்தில் ஏர்போர்ட் வரியும் உள்ளடங்கும். குறைந்த டிக்கெட்கள் மட்டுமே சலுகை விலையில் கிடைக்கும். ஒரு வழி பயணங்களுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும்.
இணைப்பு விமானங்கள்
கோலாலம்பூர் வழியாக இணைப்பு விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கும் ஏர் ஏசியா நிறுவனம் சலுகைகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications