இந்தியாவின் முன்னணி மொபைல் பேமெண்ட் சேவை வழங்கும் பேடிஎம் நிறுவனத்திற்கு, முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தை அமைக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாக விளங்கும் செபி ஒப்புதல் அளித்துள்ளது. இப்புதிய நிறுவனத்தின் பெயர் பேடிஎம் மணி.
இதன் உரிமத்தின் மூலம் பேடிஎம் நிறுவனம் இனி நாடு முழுவதும் முதலீட்டு மற்றும் சொத்து மேலாண்மை திட்டங்களை வெளியிடலாம்.
முதல் திட்டம்..
பேடிஎம் மணி நிறுவனம் முதல்கட்டமாகத் தனது முதலீட்டுத் திட்டங்கள் பிரிவில் நேரடி மியூச்சவல் பண்ட் திட்டங்களை ஜீரோ கமிஷன் முறையில் வழங்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான லாபம் கிடைக்கும்.
தனிப்பட்ட செயலி
இத்திட்டத்திற்குப் பேடிஎம் நிறுவனம் தனிப்பட்ட செயலியை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தச் செயலி ஆணட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்கள் என இரு தரப்பினருக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட பணிகள்
இப்புதிய நிறுவனத்தில் சேரும் நபர்கள் செபி மற்றும் KYC விதிமுறைகளை முழுமையாக முடித்த பின்பு சேவை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆகவே இதற்கான பணிகளை மட்டுமே தற்போது செய்து வருகிறது.
தொடர் அறிவிப்புகள்
இதுவரை ஆன்லைன் ஷாப்பிங், பில் பேமெண்ட், டிக்கெட் போன்ற சேவைகளை மட்டுமே வழங்கி வந்த நிலையில் தற்போது கிடைத்த பேடிஎம் மணி நிறுவனத்திற்கான உரிமம் மூலம் முதலீட்டுச் சந்தையில் நுழைவது மட்டும் அல்லாமல் அனைத்து விதமான முதலீடுகளிலும் இயங்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இணையதளம்
இப்புதிய நிறுவனத்தின் இணையத்தளம் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், ஆர்வமுடையவர்கள் இதில் சேரலாம்.


Click it and Unblock the Notifications