இந்திய டெலிகாம் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தற்போது போட்டியின் காரணமாக வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் அதிகளவில் இழந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் அதிகளவிலான கடன் நெருக்கடியால் ஆர்காம் சரிவர இயக்க முடியாமலும் தவித்தது.
இந்நிலையில் தனது சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கடனை அடைக்க முடியும் என அறிவித்தார் அனில் அம்பானி. ஆனால் தற்போது சொத்து விற்பனைக்கும் தடை ஏற்பட்டுள்ளது.
தடை..
ஆர்காம் மற்றும் இதன் இரண்டு கிளை நிறுவனங்கள், நிறுவன சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நிலுவை தொகை
ஆர்காம், எரிக்சன் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகை இன்னும் அளிக்காத நிலையில், இதன் பெற எரிக்சன் ஆர்காம் சொத்துக்கள் விற்பனைக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் நீதிமன்றம் சொத்து விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்காம் எரிக்சன் நிறுவனத்திற்குச் சுமாக் 177.8 மில்லியன் டாலர் தொகை நிலுவை வைத்துள்ளது.
7 பில்லியன் டாலர்
ஆர்காம் இந்திய மற்றும் வெளிநாட்டு வங்கிகளுக்குச் சுமார் 7 பில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கடனாகப் பெற்று நிலுவை வைத்துள்ளது.
சொத்து விற்பனை
இந்த மிகப்பெரிய கடன் சுமையைக் குறைக்கும் விதமாக ஆர்காம் தனது நிறுவன சொத்துக்களைத் தனது சொந்த அண்ணன் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோவிற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டது.
விற்பனை செய்யப்படும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 3.69 பில்லியன் டாலர்.
முகேஷ் அம்பானி
ஆர்காம் நிறுவனத்தில் இருக்கும் ஸ்பெக்டரம், டவர், பைர் மற்றும் இதர தொழில்நுட்பம் உபகரணங்களைச் சுமார் 24,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இரு தரப்பும் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் தான் எரிக்சன் வழக்கை தொடுத்துள்ளது.
திவால்
ஆர்காம் நிறுவனத்திற்கு அதிகளவில் கடன் கொடுத்த சீன வளர்ச்சி வங்கி இந்நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது. இதன் பின்பே முதலீட்டாளர்களின் நலன் காக்கும் வண்ணம் பல முக்கிய முடிவுகளை எடுத்தார் அனில் அம்பானி. இதன் ஒரு பகுதியே சொத்து விற்பனை.


Click it and Unblock the Notifications