2018-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தேதி அறிவிப்பு!

தமிழகச் சட்டமன்றத்தில் வர இருக்கும் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தேதியை அறிவித்துள்ளனர். இதன் படி வர இருக்கும் 2018 மார்ச் 15-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.

துணை முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் பதவிகளை வகித்து வரும் ஓ பன்னீர்செல்வம் 2018 மார்ச் 15-ம் தேதி காலை 10:30 மணியளவில் பட்ஜெட்டினை தாக்கல் செய்வார் என்று மாநில அரசின் பத்திரிக்கை வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தேதி அறிவிப்பு!

முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகக் கட்சி இரண்டாகப் பிரிந்து இருந்த நிலையில் 2017-2018 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை ஜெயகுமார் தாக்கல் செய்து இருந்தார்.

ஆனால் இப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரு அதிமுக அணிகளும் இணைந்துள்ள நிலையில் மீண்டும் ஓ பன்னீர் செல்வம் 2018-2019 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்ய இருக்கிறார்.

2017-2018 நிதி ஆண்டி வருகின்ற மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் 2018 மார்ச் 15-ம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனச் சபாநாயகரின் தனிப்பிரிவு செயலாளராகவும், சட்டமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+