அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 45,000 கோடி ரூபாய் கடனை தீர்க்க நிறுவனத்தின் சொத்து மற்றும் வர்த்தகத்தை முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சொத்துக்களை விற்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஆர்காம் நிர்வாகம் அடுத்து என்ன செய்து என்றே தெரியாமல் நிற்கிறது.
டவர் வர்த்தகம்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் இண்பராடெல்-இன் சொத்துக்களை விற்க மார்ச் 13 வரையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் அனில் அம்பானி நிறுவனத்திற்கு இது 2வது தடை.
ஹெச்எஸ்பிசி
ரிலையன்ஸ் இண்பராடெல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஹெச்எஸ்பிசி டெய்சி இன்வெஸ்ட்மென்ட்ஸ் சொத்துக்களை விற்பனை செய்ய மறுத்து வருகிறது.
சட்டம் 397 மற்றும் 398இன் படி நிறுவனத்தின் சிறு பங்கீட்டாளர் நிறுவன சொத்துக்கள் விற்பனை செய்ய மறுத்தால் விற்பனை செய்யக்கூடாது. இதன் அடிப்படையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் பிரகாஷ் குமார் மற்றும் ரவிகுமார் துறைசாமி ஆகியோர் தலைமையிலான பென்ச் விற்பனைக்கு மார்ச் 13ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.
கோரிக்கை
ஆர்காம் நிறுவனத்தின் பிற வர்த்தகம் சரிவை சந்தித்தது இருக்கும் நிலையில் லாபத்தில் இருக்கும் ரிலையன்ஸ் இன்பராடெல் சொத்துக்களை மட்டும் ஏன் முழுமையாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஆர்காம் நிறுவனத்தின் சொத்துக்களில் ஒரு பகுதி மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
எங்களது சொத்துக்களை முழுமையாக விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் மட்டுமே லாபம் அடையக்கூடாது. என ஹெச்எஸ்பிசி டெய்சி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
ஆர்காம் - எரிக்சன்
இந்த வாரத்தின் துவக்கத்தில் ஆர்காம், எரிக்சன் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகை இன்னும் அளிக்காத நிலையில், இதன் பெற எரிக்சன் ஆர்காம் சொத்துக்கள் விற்பனைக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் நீதிமன்றம் சொத்து விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்காம் எரிக்சன் நிறுவனத்திற்குச் சுமாக் 177.8 மில்லியன் டாலர் தொகை நிலுவை வைத்துள்ளது.
தடை..
ஆர்காம் மற்றும் இதன் இரண்டு கிளை நிறுவனங்கள், நிறுவன சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications