ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரம்ஜான் சலுகையாக அடிப்படை கட்டணத்தில் 40 சதவீதம் வரை குறிப்பிட்ட வழித்தடங்களில் சலுகையினை அறிவித்துள்ளது. இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் jetairways.com என்ற இணையதளம் மூலமாகக் கிடைக்கும்.
சலுகை விலை டிக்கெட்களை 2018 மார்ச் 22-ம் தேதிக்குள் மே 15 முதல் ஜூன் 15 வரையிலான பயணங்களுக்குப் புக் செய்து பயன்பெறலாம்.
ரம்ஜான் சலுகை
ஜேட் ஏர்வேஸ் வழங்கும் இந்த ரம்ஜான் சலுகையானது ஒரு வழிப்பாதை மற்றும் இருவழிப் பாதை என இரண்டு வழிகளிலும் கிடைக்கும்.
40 சதவீதம் சலுகை
இந்தியாவில் இருந்து அபுதாபி, பஹ்ரைன், டமாம், டோஹா, துபாய், ஜெட்டா, குவைத், மஸ்கட், ரியாத் மற்றும் ஷார்ஜா ஆகிய வழித்தடங்களில் பயணம் செய்யும் போது 40 சதவீத டிக்கெட் சலுகை கிடைக்கும்.
20 சதவீத சலுகை
மும்பை, தில்லி, பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலயங்களில் இருந்து பிரேசில், ஜெனீவா, ஹெல்சின்கி, லிஸ்பன், மாட்ரிட், மான்செஸ்டர், மிலன், மியூனிக், நைஸ், ஒஸ்லோ, ப்ராக், ரோம், ஸ்டாக்ஹோம், வெனிஸ், வியன்னா, வார்சா மற்றும் சூரிச் ஆகிய வழித்தடங்களில் பயணம் செய்யும் போது 20 சதவீத கட்டண சலுகை கிடைக்கும்.
விஸ்தரா


Click it and Unblock the Notifications