நீண்ட நாட்களாக இந்திய ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு டயர் சப்ளை செய்து வந்த தையாவனைச் சேர்ந்த மேக்ஸிஸ் டயர்ஸ் தற்போது இந்தியாவில் 2,640 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மாக்ஸிஸ் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளராக 2015-ம் ஆண்டு முதல் ஹோண்டா நிறுவனம் உள்ளது. புதிய தொழிற்சாலையினைக் குஜராத்தில் உள்ள டாடா நேனோ தொழிற்சாலைக்கு மிக அருகில் துவங்க உள்ளதாகத் தகவல் கூறுகின்றன.
தொழிற்சாலை
மேக்ஸிஸ் டயர்ஸ் நிறுவனம் 2,640 கோடி ரூபாய் முதலீட்டில் 106 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளதாகவும், 2000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி
ஒரு நாளைக்கு 20,000 முதல் 40,000 டயர்கள் வரை இங்குத் தயாரிக்க உள்ளதாகவும் 2023-ம் ஆண்டுக்குள் இந்திய சந்தையில் 15 சதவீதத்தினைப் பிடிக்க முடிவு செய்துள்ளதாகவும் மேக்ஸிஸ் டயர்ஸ் கூறியுள்ளது.
டாப் 5
2026-ம் ஆண்டுக்குள் உலகின் டாப் 5 டயர் உற்பத்தி நிறுவனமாக மாக்ஸிஸ் டயர்ஸ் வளர வேண்டும் என்பதே இலக்கு என்று செயல்பட்டு வருவதாக மேக்ஸிஸ் இந்தியா பிரிவின் தலைவர் செங்-யெ லியாவா கூறியுள்ளார்.
மேக் இன் இந்தியா
இந்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுவதாகவும், இங்கு இருந்து உலக முழுவதிலும் டயர் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய வாடிக்கையாளர்கள்
ஹோண்டா இரண்டு சக்கார வாகனம், மாருதி சுசூகி, மகேந்திரா, டாடா மற்றும் ஜீப் உள்ளிட்ட நிறுவனங்கள் மேக்ஸிஸ் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
More From GoodReturns

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!



Click it and Unblock the Notifications