பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவணங்களைக் கொடுத்து சுமார் 12,000 கோடி ரூபாய் வரையிலான மோசடி செய்த நீரவ் மோடி தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் நீரவ் மோடி மீது புதிதாக ஒரு மோசடி வழக்குப் பதிவு செய்யதுள்ள சிபிஐ.
புதிய மோசடி
2013-2017 வரையிலான காலத்தில் நீரவ் மோடியின் பையர்ஸ்டார் குரூப் நிறுவனத்திற்குப் பல்வேறு காரணங்களுக்காகக் கடன் பெறப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைத் தத்தம் காரணங்களுக்காகப் பயன்படுத்தாமல் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மார்ச் 4
இதுகுறித்துப் பஞ்சாப் நேஷனல் வங்கியின், மும்பை பிராடி சாலை கிளை சிபிஐ ஆதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது.ட
இந்தப் புகாரை அடுத்துச் சிபிஐ தனிப்பட்ட வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளது.
321 கோடி ரூபாய்
இப்படி நீரவ் மோடி தலைமையிலான பையர்ஸ்டார் குரூப் நிறுவன சுமார் 321 கோடி ரூபாய் அளவிலான வங்கி கடனை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது.
வழக்கு
சிபிஐ பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் பையர்ஸ்டார் டைமென்ட்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் நீரவ் மோடி, விபுல் அம்பானி, தலைமை நிதியியல் அதிகாரி ரவி குப்தா மற்றும் நிறுவனத்தின் இதர தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணப் பரிமாற்றங்கள்
நீரவ் மோசடி வழக்கை விசாரிக்கும் போது வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன் தொகை சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டைமென்ட்ஸ், டைமென்ட்ஸ் ஆர் பையர்ஸ்டார் குரூப் நிறுவனங்கள் ஆகியவற்றின் மத்தியில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications